உலோகங்களை உண்ணும் அதிசய மனிதன்


விரிந்து கிடக்கும் உலகில் எத்தனை விதமான மனிதர்கள் வாழ்க்கிறார். நாம் பசி வந்தால் அறுசுவை உணவை தேடுவோம். விதம் விதமான சுவையான உணவுகளை உண்ணுவோம்.
ஆனால் பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த Michel Lotito வித்தியாசமான உணவுப் பழக்கங்களை கொண்டவராக திகழ்கிறார். இவர் தன் கண்ணில் காணும் உலோகப் பொருட்கள், கண்ணாடிகள், மின் விளக்குகள் என பலவற்றை விருப்பி உண்பவராக இருக்கிறார்.

1978 ஆம் ஆண்டளவில் மிதி வண்டிகளை உணவாக உட்கொண்டு, மக்களுக்கு அதி்ச்சியளித்தார். அதன்மூலம் பிரபல்யமும் அடைந்தார். இவரின் அசாத்திய செயற்பாடுகளை கண்டு மருத்துவதுறையினர் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

பல்வேறு வகையில் ஆய்வுகளை மேற்கொண்டும் அவரின் இந்த பழக்கத்திற்கான காரணத்தையும் அவரின் உடல் உலோகங்களை ஏற்றுக்கொள்வதற்கான காரணத்தையும் கண்டறிய முடியவில்லை.

எனினும் Michel Lotito வின் மூளையில் உலோகம், ஒரு உணவுப் பொருளாக கருதுவதால் இது சாத்தியப்படலாம் என எதிர்வு கூறப்பட்டுள்ளது.

Michel_Lolito_eating_metal_botls_in_restaurant_bigLeave a Reply

Your email address will not be published. Required fields are marked *