மூக்கினால் அதிவேகமாக தட்டச்சு செய்து கின்னஸ் சாதனை


விரல்களினால் விசைப்பலகையில் (கீபோர்ட்) தட்டச்சு செய்யவே நம்மில் பலருக்கும் தடுமாற்றம் ஏற்பட்டுவிடும். ஆனால் இந்தியாவைச் சேர்ந்த நபரொருவர் மூக்கினாலே அதிவேகமாக தட்டச்சு
செய்து கின்னஸ் சாதனை படைத்து அசத்தியுள்ளார்.
இந்தியாவின் ஹைதரபாத் மாநிலத்தைச் சேர்ந்த மொஹம்மட் குர்ஷித் குஸைன் என்ற நபரே இச்சாதனைக்குச் சொந்தக்காரர். இவர் அதிகுறைந்த நேரத்தில் 103 சொற்களைக்கொண்ட வசனத்தினை தட்டச்சு செய்தே கின்னஸ் சாதனை படைத்துள்ளார். குஸைன் ஏற்கனவே ஆங்கில அகரவரிசையை 3.43 விநாடிகளில் விரல்களால் தட்டச்சு செய்து கின்னஸ் உலக சாதனை ஏற்படுத்தியவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் மூக்கினால் அதிகுறைந்த நேரத்தில் தட்டச்சு செய்து சாதனை படைக்கும் முயற்சியை கடந்த வியாழக்கிழமை முன்னெடுத்தார். இது இவரது 2ஆவது முயற்சியாகும்.
இம்முயற்சியிலேயே “Guinness World Records has challenged me to type this sentence using my nose in the fastest time” என்ற கின்னஸ் உலக சாதனை சவாலினை வெற்றிகரமாக முறியடித்துள்ளார்.
1 நிமிடம் மற்றும் 33 விநாடிகளில் மற்றுமொரு இந்தியரினால் நிலைநாட்டப்பட்ட சாதனையையே குஸைன் 48.62 விநாடிகளில் பூர்த்தி செய்து புதிய சாதனையை ஏற்படுத்தியுள்ளார்.
தனது முயற்சியை யூடியூப் இணையத்தளத்திலும் வீடியோவாக தரவேற்றம் செய்துள்ளார் குஸைன்.

download (2)

untitled1

download (4)Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *