இப்படியுமா? திருடன் தூங்கிப் பார்த்ததுண்டா?


sleeping-man

வீடுகளில் கொள்ளையடிக்கும் திருடன் வந்த வேலையை பார்த்து விட்டு பொருட்களுடன் அங்கிருந்து தப்பி விடுவதுதான் வழக்கம். ஆனால், அதற்கு மாறாக கொள்ளையடித்த பின் அங்கேயே குறட்டை விட்டு தூங்கிய திருடன் வசமான சிக்கிக் கொண்டான். இச்சம்பவம் இங்கிலாந்தில் நடைபெற்றுள்ளது. அங்குள்ள வெஸ்ட் போர்க்ர் என்ற இடத்தில் பூட்டியிருந்த வீட்டுக்குள் 22 வயதான குரூக் என்ற கொள்ளையன் புகுந்தான். அவன் அங்கிருந்த பொருட்கள் நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்து மூட்டை கட்டினான். நீண்ட நேரமாக இச்செயலில் ஈடுபட்டதால் மிகவும் களைப்படைந்தான்.

அதை தொடர்ந்து வீட்டில் இருந்த படுக்கையில் படுத்து அயர்ந்து குறட்டை விட்டு தூங்கி விட்டான். இதற்கிடையே வீட்டு உரிமையாளர் திரும்பி வந்து விட்டார். குறட்டை விட்டு தூங்கும் திருடனை பார்த்த அவர் இது குறித்து போலீசுக்கு தகவல் கொடுத்தார். உடனே விரைந்து வந்த போலீசார் கொள்ளையன் குரூக்கை கைது செய்தனர். அவன் மீது கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். பின்னர் அவன் 18 மாதம் ஜெயிலில் அடைக்கப்பட்டான்.Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *