இணைபிரியாமல் இருந்த தம்பதிகளின் இணைபிரியா மரணம்


அமெரிக்காவின் FLORIDA மாகாணத்தில் 45 வருடங்கள் ஒற்றுமையாக குடும்பம் நடத்திய தம்பதிகள் 15 நிமிட இடைவெளியில் மரணம் அடைந்த அதிசய சம்பவம் ஒன்று நடந்துள்ளது.

FLORIDA மாகாணத்தில் Tom Shirley, என்ற 83 வயது நபரும் அவருடைய 75 வயது மனைவி Naomi Shirley  அவர்களும் கடந்த 1969ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். இவர்கள் கடந்த 45 வருடங்களாக ஒற்றுமையாக எவ்வித கருத்துவேறுபாடுகளும் இன்று ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்து வாழ்ந்து வந்தனர்.

கடந்த சனிக்கிழமை Tom Shirley க்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. அவர் உடனடியாக Cleveland Clinic என்ற மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை நடந்து கொண்டிருந்த போது திடீரென  Naomi Shirley அவர்களுக்கு மாரடைப்பு ஏற்பட்டது.

சிகிச்சைக்கு பலனின்றி முதலில் Tom Shirley, மரணம் அடைந்தார். அவர் இறந்த 15 நிமிடங்கள் கழித்து  Naomi Shirley அவர்களும் அதே மருத்துவமனையில் மரணம் அடைந்தார். வாழ்வில் 45 வருடங்கள் ஒற்றுமையாக இருந்த தம்பதிகள் மரணத்தில் கூட பிரியவில்லை. அவர்களுடைய மரணம் தனக்கு மிகுந்த அதிர்ச்சியளிப்பதாக இருந்தாலும், ஒருபுறம் பெருமையாக இருப்பதாக அந்த தம்பதிகளின் ஒரே மகன் Troy கூறினார். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *