உலகின் முன்னாள் பருமனான நபர் 48 வயதில் மரணம்


 

உலகின் பருமனான நபராக 2006 ஆம் ஆண்டில் கின்னஸ் உலக சாதனைப் புத்தகத்தில் இடம்பிடித்த மெக்ஸிக்கோவைச் சேர்ந்த மானுவேல் உரிபே தனது 48 ஆவது வயதில் கடந்த திங்கட்கிழமை  மரணமாகியுள்ளார்.
உலக சாதனைப் புத்தகத்தில் இடம்பிடித்ததையடுத்து தனது உடல் நிறையை குறைப்பதற்காக கடும் உடற்பயிற்சிகளையும் உணவுக் கட்டுப்பாட்டையும் மானுவேல் உரிபே பின்பற்றியதையடுத்து அவரது நிறை 363 இறாத்தலால் குறைந்து 867இறாத்தலாக மாறியது.
எனினும் கடந்த 2 ஆம் திகதி வழமைக்கு மாறான இருதய இயக்கம் காரணமாக மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தமை குறிப்பிடத்தக்கது.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *