போதைப்பொருள் விற்றாரா பிரபாகரன்? 


போதைப்பொருள் வர்த்தகம் நடத்தியே தமிழர் ஆயுதப் போராட்டம் நடந்தது என ஜனாதிபதி கூறியுள்ளமை ஒட்டுமொத்த தமிழர் போராட்டத்தையே கொச்சைப்படுத்தும் செயல்.

இதனை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன். வரலாறு தெரியாமல் உளறுதல் சரியல்ல.

பிரபாகரன் போதைப்பொருள் வர்த்தகத்தில் ஈடுபட்டு ஆயுதப்போராட்டத்தை நடத்தினர் என இலங்கை ஜனாதிபதி குறிப்பிட்டிருந்தார்.

இது தொடர்பில் கடும் விசனத்தை வெளியிட்டுப்பதிலளித்த சுமந்திரன் எம்.பி. மேலும் கூறியவை வருமாறு:

பிரபாகரன் நடத்திய போராட்டத்துக்கு தமிழ் மக்களின் ஆதரவு இருந்தது. புலம்பெயர் தேசங்களில் இருந்து தமிழர்கள் அதற்கு பெருமளவான நிதிப் பங்களிப்பைச் செய்திருக்கிறார்கள்.

இந்த பின்னணியில் வரலாறு தெரியாமல் உளறி இப்படி இலங்கை ஜனாதிபதி கூறுவது முற்றுமுழுதானதவறு. அதனை நான் கண்டிக்கிறேன்.

இது ஆயுதப்போராட்டத்தைக் கொச்சைப்படுத்தும் ஒரு பொய்த் தகவல். இப்படி ஒரு குற்றச்சாட்டு முன்னெப்போதும் இருந்ததில்லை – என்றார்.

நன்றி- tamil news networksLeave a Reply

Your email address will not be published. Required fields are marked *