வடக்கில் ஊழலற்ற ஆட்சி நடக்கவேண்டும் – வடமாகாண ஆளுநர்


வடமாகாண புதிய ஆளுநர் சுரேன் ராகவன் இன்று தனது கடமைகளைப் பொறுப்பேற்றுக்கொண்டார். இந்த நிகழ்வு வடமாகாண ஆளுநர் செயலகத்தில் இடம்பெற்றது.

இதனைத் தொடர்ந்து வடமாகாண ஆளுநரை வரவேற்கும் நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த நிகழ்வில் வடமாகாண முன்னாள் அவைத்தலைவர் சி.வி.கே. சிவஞானம், முன்னாள் வடமாகாண எதிர்க்கட்சித் தலைவர் தவராசா, யாழ். மாநகர சபை முதல்வர், இந்திய துணைத்தூதுவர் சங்கர் பாலச்சந்திரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

இதன்போது கருத்துத் தெரிவித்த வடமாகாண ஆளுநர் சுரேன் ராகவன், “வடமாகாணத்தில் தமிழ் மொழி முன்னிலைப்படுத்தப்படுவதில்லை.

வருகின்ற ஏப்ரல் மாதம் 9 ஆம் திகதிக்கு முன்னர் ஆகக்குறைந்தது இரண்டு மொழிகளாவது இடம்பெறுமாறு பெயர்ப்பலகைகளைப் போடுவதற்கு நடவடிக்கை எடுப்பேன். இங்கு ஊழலற்ற ஆட்சி நடக்க வேண்டும்” என குறிப்பிட்டார்.

 Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *