‘காப்பான்’ ஓகஸ்ட் மாதம் வெளியாகும்!


கே.வி.ஆனந்த் இயக்கத்தில் சூர்யா மூன்றாவது முறையாக இணைந்துள்ள படம் காப்பான்.

இந்தப் படத்தில் மோகன்லால், ஆர்யா, சாயிஷா சைகல், பொமன் இரானி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

இந்தப் படத்தில் நடிகர் மோகன்லால் இந்திய பிரதமராகவும், அவருக்கு பாதுகாப்பளிக்கும் உயர் அதிகாரியாக சூர்யாவும் நடித்துள்ளனர்.

.வெளிநாடுகளிலும் படமாக்கப்பட்டுள்ள இந்தப் படம் ஆகஸ்ட் மாதம் வெளியாக உள்ளது.

நன்றி -thinakaran



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *