ஈரான் மீது அமெரிக்கா புதிய பொருளாதாரத் தடைகள் விதிக்க ஆயத்தமாகிவரும் செய்திகளால் பதற்றம்


ஈரான் மீது அமெரிக்கா புதிய பொருளாதாரத் தடைகள் விதிக்க ஆயத்தமாகி வருவதாக செய்திகள் வெளியாகியுள்ள நிலையில் இரு நாடுகளுக்கிடையிலான உறவில் பதற்றம் அதிகரித்து வருவதாகக் கூறப்படுகிறது.
இது, வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஈரான் அணுசக்தி ஒப்பந்தத்தின் அமலாக்கம் குறித்த கவலையை எழுப்பியுள்ளது.
இதுகுறித்து தகவல்கள் தெரிவிப்பதாவது:
தாங்கள் அணு ஆயுத பலம் பெறப் போவதில்லை என ஈரான் உறுதி செய்யவும், அதற்குப் பதிலாக அந்த நாட்டின் மீது விதிக்கப்பட்டுள்ள பொருளாதாரத் தடைகளை அமெரிக்கா உள்ளிட்ட வல்லரசு நாடுகள் விலக்கிக் கொள்ளவும் இரு தரப்பினருக்கும் இடையே கடந்த ஆண்டு ஜூலை மாதம் ஒப்பந்தம் கையெழுத்தானது.
அந்த ஒப்பந்தம் கையெழுத்தான ஐந்தே மாதங்களில் ஈரான் இரண்டு முறை அணு ஆயுதங்களை சுமந்து செல்லும் திறன் கொண்ட ஏவுகணைகளைப் பரிசோதித்துப் பார்த்ததாக அமெரிக்க அதிகாரிகள் குற்றம் சாட்டினர்.
அவற்றில் ஒரு ஏவுகணைப் பரிசோதனை குறித்த செய்தியை ஈரான் அரசு ஊடகமே வெளிப்படையாக தெரிவித்தது.
மேலும், பூமிக்கு அடியில் ரகசிய ஏவுகணைத் தளத்தை அமைத்துள்ள ஈரான், அதனை அரசுத் தொலைக்காட்சியில் ஒளிபரப்பியது.
இதற்கிடையே, அமெரிக்கா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகளின் 3 போர்க் கப்பல்களுக்கு மிக அருகே ஈரானியக் கப்பல் ஏவுகணைகளை ஏவி பரிசோதனை செய்ததாக அமெரிக்கா குற்றம் சாட்டியது.
ஈரானின் அணு ஆயுதத் திறன் கொண்ட ஏவுகணை மேம்பாட்டுத் திட்டங்களுக்கு எதிராகப் பல தீர்மானங்களை இயற்றியுள்ள ஐ.நா. பாதுகாப்புக் கவுன்சில் ஈரானின் செயல்பாடுகளால் அதிருப்தியடைந்திருப்பதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
மேலும், ஈரானின் ஏவுகணை மேம்பாட்டுத் திட்டங்களுக்கு பக்கபலமாக இருக்கும் நிறுவனங்களையும், நபர்களையும் பொருளாதாரத் தடை பட்டியலில் சேர்க்க அமெரிக்கா தயாராகி வருவதாகத் தகவல்கள் தெரிவித்தனLeave a Reply

Your email address will not be published. Required fields are marked *