அமெரிக்கா அறிவியல் மையம் | ஆண்டுதோறும் லட்சக்கணக்கானோர் காற்று மாசுபாட்டால் உயிரிழப்பு


காற்று மாசுபாட்டினால் உலகம் முழுவதும் ஆண்டு தோறும் 55 லட்சம் பேர் உயிரிழக்கின்றனர். இதில் பாதிக்கு மேற்பட்ட உயிரிழப்பு  வேகமாக வளர்ந்து வரும் சீனா, இந்தியா நாடுகளில் தான் நிகழ்கிறது.

அமெரிக்காவில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வு ஒன்றில் இந்த தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

காற்று மாசுபாட்டினால் ஏற்படும் சிக்கல்களால், கடந்த சில வருடங்களாக, குறிப்பிட்ட காலத்துக்கு முன்பாகவே மரணமடைவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருவதாக அமெரிக்காவில் தலைநகர் வாஷிங்டனில் உள்ள அறிவியல் மையம் எச்சரித்துள்ளது.

இது குறித்து கனடாவில் உள்ள பிரிட்டிஸ் கொலம்பியா பல்கலைக் கழகத்தின் மக்கள்த் தொகை மற்றும் பொது சுகாதாரத் துறை பேராசிரியர் மிச்செல் பிராயர் கூறுகையில், “உலக அளவில் இறப்பு விகிதம் அதிகரிப்பதற்கான காரணிகளில் 4-வது முக்கிய பிரச்சனையாக காற்று மாசுபாடு உள்ளது. அதேபோல் சுற்றுச் சூழல் மாசுபடவும் முக்கிய காரணியாக உள்ளது” என்றார்.

அதேபோல், உலக அளவில் ரத்த கொதிப்பு, டயட் மற்றும் புகைப்பிடித்தல் ஆகியவற்றிற்கு அடுத்த இடத்தில் ஆபத்தான காரணியாக காற்று மாசுபாடு உள்ளது என்று மற்றொரு அமைப்பு கூறியுள்ளது.Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *