நாடாளுமன்றத் தேர்தல் | ஈரான்


ஈரான் நாடாளுமன்றத் தேர்தல் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

வல்லரசு நாடுகளுடனான அணுசக்தி ஒப்பந்தத்தைத் தொடர்ந்து, அந்த நாட்டில் நடைபெறும் தேர்தல் இது என்பது குறிப்பிடத்தக்கது.

290 எம்.பி.களைத் தேர்ந்தெடுப்பதற்கான இந்தத் தேர்தலில் வாக்களிக்க, 5.5 கோடி வாக்காளர்களின் பெயர்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

இந்தத் தேர்தலின் மூலம், மிதவாதியான அதிபர் ஹஸன் ரெளஹானியின் அரசுக்கு, நாடாளுமன்றத்தில் கூடுதல் பலம் கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.

தற்போது, நாடாளுமன்றத்தில் பழமைவாதக் கட்சியினர் ஆதிக்கம் நிறைந்து காணப்படுவதால், ரெளஹானி அரசால் பல சீர்திருத்தங்களைக் கொண்டு வர முடியவில்லை எனக் கூறப்படுகிறது.

நாடாளுமன்றத்துக்கு மட்டுமின்றி, ஈரானின் சக்தி வாய்ந்த மதத் தலைவர் அயதுல்லா அலி கமேனியின் நடவடிக்கைகளைக் கண்காணிக்கும் 88 உறுப்பினர் குழுவையும் வாக்காளர்கள் தேர்ந்தெடுப்பர். அயதுல்லா கமேனிக்குப் பிறகு, அவரது பதவிக்கான அடுத்த தலைவரை அந்தக் குழுவே நியமிக்கும்.

 Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *