இங்கிலாந்து சட்டவிரோதமாக குடியேறுபவர்களுக்கு எதிரான புதிய நடவடிக்கைகள் பற்றி அறிவிப்பு


சட்டவிரோதமாக குடியேறுபவர்களுக்கு எதிரான புதிய நடவடிக்கைகள் பற்றி இங்கிலாந்து அறிவித்துள்ளது. புதிய அறிவிப்பின் படி சட்டவிரோத குடியேறிகளுக்கு வீடுகளை தரும் வீட்டு உரிமையாளர்களுக்கு 5 வருடம் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படலாம் என்று அறிவித்துள்ளது.

புதிதாக கொண்டுவரப்படும் சட்டத்தின் அடிப்படையில், வாடகை ஒப்பந்தங்களை செய்துகொள்வதற்கு முன்னதாக வாடகைக்கு வருவோரின் குடியுரிமையை வீட்டு உரிமையாளர் சோதனை செய்ய வேண்டும். அப்படி செய்யாமல் திரும்பத்திரும்ப தவறிழைப்போருக்கு 5 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனையும் விதிக்கப்படலாம்.

இந்தப் புதிய திட்டத்தின்படி, தஞ்சம் கோரிகளுக்கான நிதி உதவிகளும் நிறுத்தப்படவுள்ளன. பிரான்ஸின் கலே பகுதியில் இருந்து இங்கிலாந்துக்குள் நுழைய நூற்றுக்கணக்கானவர்கள் முயற்சிப்பதால் கடும் நெறுக்கடி ஏற்பட்டுள்ள நிலையில் இந்த அறிவிப்பு வந்துள்ளது.Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *