முஸ்லிம்கள் மீதான தனது நிலைப்பாட்டில் இருந்து இறங்கி வருகிறார் | டொனால்டு டிரம்ப்


அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் குடியரசு கட்சியின் உத்தேச வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருப்பவர், டொனால்டு டிரம்ப். சர்ச்சைக்குரிய விதத்தில் பேசி வந்த அவர் கடந்த டிசம்பர் மாதம், அமெரிக்காவில் முஸ்லிம்கள் நுழைவதற்கு ஒட்டுமொத்தமாக தடை விதிக்க வேண்டும் என்று கூறினார்.

இது அவருக்கு ஆதரவையும், எதிர்ப்பையும் சம்பாதித்து கொடுத்தது.

இப்போது ஜனாதிபதி தேர்தலில் அவர் குடியரசு கட்சியின் வேட்பாளர் ஆவது உறுதியாகி விட்ட நிலையில் முஸ்லிம்கள் மீதான தனது நிலைப்பாட்டில் இருந்து இறங்கி வருகிறார். இதற்கு அவர் ‘பாக்ஸ் ரேடியோ’வுக்கு அளித்த பேட்டியே ஆதாரமாக அமைந்துள்ளது.

இந்த பேட்டியில் அவர், ‘‘இது ஒரு முக்கிய பிரச்சினை. அமெரிக்காவினுள் முஸ்லிம்கள் நுழைய தடை விதிப்பது என்பது தற்காலிகமானதுதான். அது ஒரு யோசனைதான். உலகமெங்கும் அடிப்படைவாத தீவிரவாதிகள் உள்ளனர். நீங்கள் பாரீசுக்கு போனாலும் அவர்களை பார்க்கலாம். சான்பெர்னார்டினோவுக்கு சென்றாலும் பார்க்கலாம். உலகமெங்கும் பார்க்கலாம். இதை அவர்கள் மறுக்க விரும்பினால், அவர்கள் மறுக்கட்டும். நான் மறுக்க மாட்டேன்’’ என கூறினார்.

அதே நேரத்தில் லண்டன் மேயர் சாதிக் கான், அமெரிக்காவில் நுழைய விதிவிலக்கு வழங்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *