களைக் கொல்லி மருந்து விமானம் மூலம் தெளித்ததில் பெருநாட்டில் 92 குழந்தைகள் பலி


பெரு நாட்டில் வடபகுதியில்  நெபேனா  நகரம் உள்ளது.  அங்குள்ள ஒரு உணவு பொருள் தயாரிக்கும் நிறுவனத்துக்கு சொந்தமான கரும்பு வயலில்  களைக் கொல்லி மருந்து விமானம் மூலம் தெளிக்கப்பட்டது. அதன் அருகில் ஒரு பள்ளி உள்ளது. அங்கு ஏராளமான குழந்தைகள் படிக்கின்றனர். மருந்து தெளிக்கும்   போது பள்ளியில் இருந்து அவர்கள் வெளியேற்றப்படவில்லை.

எனவே, அந்த மருந்தின் விஷத்தன்மையை சுவாசித்த பள்ளிக் குழந்தைகளுக்கும், ஆசிரியர்களுக்கும் வாந்தி- மயக்கம்  ஏற்பட்டது. சிலருக்கு வயிறு  மற்றும் தலைவலி ஏற்பட்டது.

உடனே  அவர்களை ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை  அளித்தும் பலனின்றி 92 குழந்தைகள் உயிரிழந்தனர்.   இவர்களை தவிர  3 ஆசிரியர்களும் பலியாகினர். மேலும்  பலருக்கு  தீவிர சிகிச்சை  அளிக்கப்படுகிறது.

இந்த பரிதாப சம்பவம் குறித்து  விசாரணை  நடத்தப்பட்டு வருகிறது. களைக் கொல்லி மருந்து தெளிக்க அந்த நிறுவனம் நெபேனா நகராட்சியிடம்  அனுமதி பெறவில்லை. மேலும் இது புற்று நோயை உருவாக்கியதால் அமெரிக்காவில் தடை செய்யப்பட்டது என தெரியவந்துள்ளது.Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *