எல்லையில் இருந்து வெளியேறும் சிரிய போராளிகள் | லெபனான்


ஹிஸ்புல்லாஹ் அமைப்புடனான யுத்த நிறுத்த உடன்படிக்கையின் கீழ் சிரியாவின் இஸ்லாமியவாத போராளிகள் லெபனான், சிரிய எல்லை பகுதியில் இருந்து வெளியேறுவதற்கு தயாராகி வருவதாக ஹிஸ்புல்லாஹ் அமைப்பின் ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.

ஹிஸ்புல்லாஹ் மற்றும் அல் நுஸ்ரா ஜிஹாதிக்களுக்கு இடையில் கடந்த வாரம் அமுலுக்கு வந்த யுத்த நிறுத்தத்தின் அடிப்படையில் சுமார் 9,000 பேர் கிளர்ச்சியாளர் கட்டுப்பாட்டு பகுதியில் இருந்து வெளியேறவுள்ளனர்.

இந்த உடன்படிக்கையில் அர்சால் நகரைச் சூழவுள்ள லெபனானின் வடகிழக்கு எல்லைப் பிராந்தியத்தில் இருந்து அனைத்து நுஸ்ரா போராளிகளும் வெளியேற உடன்பட்டுள்ளனர்.

அங்குள்ள அகதிகளும் விரும்பினால் வெளியேற அனுமதிக்கப்பட்டுள்ளனர். பதிலாக நுஸ்ரா முன்னணி தனது பிடியில் இருக்கும் எட்டு ஹிஸ்புல்லாஹ் போராளிகளை விடுவிக்க இணங்கியுள்ளது. லெபனானின் உள்நாட்டு பாதுகாப்பு நிறுவனத்தின் மத்தியஸ்தத்தில் இடம்பெற்ற இந்த யுத்த நிறுத்தத்தின் கீழ் இரு தரப்புகளும் கடந்த ஞாயிறன்று மோதலில் கொல்லப்பட்ட தமது போராளிகளின் சடலங்களை பரஸ்பரம் பரிமாறிக்கொண்டனர்.

லெபனானின் சிரிய எல்லையின் பெரும் பகுதியை ஹிஸ்புல்லாஹ் கைப்பற்றி முன்னேற்றம் கண்டு வந்தமை குறிப்பிடத்தக்கது.Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

5 × four =