சவுதி கூட்டுப்படைகளின் வான்வழி மற்றும் தரைவழி தாக்குதலில் 200 பேர் பலி


ஏமன் நாட்டின் தலைநகரான சனா உள்ளிட்ட பல்வேறு நகரங்கள் ஹவுத்தி கிளர்ச்சியாளர்களால் கைப்பற்றப்பட்டதால் அந்நாட்டில் உள்நாட்டு போர் உச்சகட்டத்தை அடைந்துள்ளது.

இதனால் அதிபர் அபெட் ரப்பு மன்சூர் ஹாதி, தலைநகர் சனாவிலிருந்து தலைமறைவானார். கிளர்ச்சியாளர்களை ஒடுக்க உதவுமாறு சவுதி அரேபியாவிற்கு வேண்டுகோள் விடுத்தார். ஹாதியின் வேண்டுகோளை ஏற்று ஹவுத்தி கிளர்ச்சியாளர்கள் மீது சவுதி அரேபியா தலைமையிலான அரேபிய கூட்டுப்படைகள் வான்வழி தாக்குதலை தொடங்கியது.

இதில் கிளர்ச்சியாளர்கள் பலர் கொல்லப்பட்டதுடன், அவர்களின் முகாம்கள் குண்டுவீச்சில் அழிக்கப்பட்டன. கிளர்ச்சியாளர்களை அழிக்கும் முயற்சியில் நடத்தப்படும் தாக்குதல்களில் ஏராளமான அப்பாவி பொதுமக்களும் பலியாகி வருகின்றனர்.

இந்நிலையில், நேற்று ஏமனின் துறைமுக நகரமான ஏடனின் வடக்கு சானா மற்றும் அம்ரான் மாகாணம் ஆகிய இடங்களில் நடைப்பெற்ற வான்வழி தாக்குதலில் மொத்தமாக 100 பேர் கொல்லப்பட்டனர். மேலும் பலர் படுகாயங்களுடன் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அதேபோல் மத்திய பாலைவன மாகாணம் மற்றும் ஏடன் மற்றும் லாஜ் இடையிலான முக்கிய சாலையில் உள்ள ஹெளதி சோதனைச் சாவடி ஆகிய இடங்களில் நடைப்பெற்ற தாக்குதலில் 50 பேர் பலியானர்கள். மொத்தமாக திங்கள் அன்று மட்டும் சவுதி கூட்டுப்படைகளின் வான்வழி மற்றும் தரைவழி தாக்குதலில் கிளர்ச்சியாளர்கள் மற்றும் பொது மக்கள் உட்பட 176 பேர் பலியானது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. பலியானவர்களின் எண்ணிக்கையானது 200 வரை இருக்கும் என்று உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *