மாடல் அழகிகள் அமெரிக்காவில் இருந்து வெளியேறப் போவதாக அறிவித்து வருகின்றனர்


டொனால்டு டிரம்பின் தேர்தல் வெற்றிக்கு எதிராக அமெரிக்க நகரங்களில் ஆர்ப்பாட்டங்கள் நடந்தன. ஒரு ஆர்ப்பாட்ட இடத்துக்கு அருகே துப்பாக்கிச்சூடு நடந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

டிரம்ப் வெற்றிஉலகின் ஒட்டுமொத்த கவனத்தையும் ஈர்த்த அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் கருத்துக்கணிப்புகளையெல்லாம் பின்னுக்கு தள்ளிவிட்டு, குடியரசு கட்சி வேட்பாளர் டொனால்டு டிரம்ப் (வயது 70) அபார வெற்றி பெற்றிருக்கிறார்.

இது அமெரிக்காவை மட்டுமல்லாது, உலக நாடுகளையெல்லாம் அதிர்ச்சியில் ஆழ்த்தி இருக்கிறது. டிரம்புக்கு எத்ராக அமெரிக்க முழுவதும் ஆங்காங்கே ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்று வருகிறது. இதற்கிடையில் அமெரிக்கா அதிபராக டொனால்டு டிரம்ப் தேர்தெடுக்கப்பட்டால் நாங்கள் நாட்டை விட்டு வெளியேறுவதை தவிர வேறு வழியில்லை என தேர்தலுக்கு முன்னரே சில மாடல் அழகிகள் அறிவித்திருந்தனர். இந்நிலையில் அதிபர் தேர்தலில் டிரம்ப் வெற்றி பெற்று விட்டார்.

இதனால் முன்னரே சொன்னபடி, அமெரிக்காவில் இருந்து வெளியேறப் போவதாக அழகிகள் ஒருவர் பின் ஒருவராக அறிவித்து வருகின்றனர். சிலர் இப்போதே டிக்கெட் எடுத்து விட்டனர். சிலர் எந்த நாட்டிற்கு செல்லலாம் என யோசித்து வருகின்றனர்.

சிலர் அவசரப்பட்டு வாயை கொடுத்துவிட்டோமோ, இனி நாட்டை விட்டு வெளியேறாமல் இருந்தால் ஊடகங்கள் படாத பாடுபடுத்தி விடுவார்கள் என நினைத்து வேதனையில் உள்ளனர்.

நாட்டை விட்டு வெளியேறுவதாக அறிவித்துள்ள அழகிகளில் முக்கியமானவர்கள்,மெல்லி கிரஸ் மைலி சைரஸ், ஆமி ஸ்கூம்மர், நெவி காம்ப்பெல், லீனா டன்ஹாம், செர் உள்ளிட்டோர் குறிப்பிடத்தக்கவர்கள் ஆவர். இவர்களில் சிலர் ஹிலாரியின் ஆதரவாளர்கள் ஆவர். சிலரோ டிரம்பின் மெக்ஸிக்கோ, கனடா, பிரிட்டன் நாடுகளுக்கு எதிரான நிலைப்பாட்டை கண்டித்து வெளியேறுகின்றனர்.

மற்றவர்கள் டிரம்ப் பெண்களுக்கு எதிரானவர் என்ற குற்றச்சாட்டை சுமத்தி அவருக்கு எதிராக இப்போது நாட்டை விட்டு வெளியேறப் போவதாக அறிவித்துள்ளனர்.

இது போல் இன்று டிரம்ப் அதிபராவத்தற்கு எதிராக நடை பெற்ற ஆர்ப்பாட்டத்தில் நடிகை மடோனா கல்ந்து கொண்டார் எனப்து குறிப்பிட தக்கது.Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *