தென்கொரிய பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் நடவடிக்கை | தென் கொரிய அதிபர் பதவியை பறிக்க தீர்மானம்


தென்கொரிய அதிபர் பார்க் கியுன் ஹை. இவரது நெருங்கிய தோழி சோய் சூன். இவர், அதிபர் பார்க் கியுன் ஹையுடன் தனக்கு உள்ள செல்வாக்கை பயன்படுத்தி, போலி தொண்டு நிறுவனங்களின் பெயரால் பல கோடி நிதி திரட்டியதாக ஊழல் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அதன்பேரில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார். ஊழலில் அவருக்கு உடந்தையாக செயல்பட்ட அதிபரின் முன்னாள் ஆலோசகர்கள் 2 பேரும் சிக்கி உள்ளனர்.

இந்த ஊழல், பார்க் கியுன் ஹைக்கு தலைவலியாக அமைந்துள்ளது. அவர் பதவி விலகுமாறு கூறி, தென் கொரியாவில் தொடர்ந்து போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

இந்த நிலையில் பார்க் கியுன் ஹையின் பதவியை பறிப்பதற்கான தீர்மானத்தை அடுத்த வாரம் பாராளுமன்றத்தில் கொண்டு வந்து, ஓட்டெடுப்புக்கு விட எதிர்க்கட்சிகள் முடிவு செய்துள்ளன. அதே நேரத்தில் அதிபரின் சொந்தக் கட்சி, அவரது பதவி பறிப்பு குறித்து இன்னும் எந்த முடிவும் எடுக்கவில்லை.

இதற்கிடையே பார்க் கியுன் ஹை, தாமாக பதவி விலகவும் முன்வந்திருப்பது நினைவுகூரத்தக்கது. ஆனால் அவர் உடனடியாக பதவி விலக வலியுறுத்தி இன்று (சனிக்கிழமை) அங்கு பெரிய அளவில் போராட்டம் நடக்க இருப்பது குறிப்பிடத்தக்கது.Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *