இஸ்ரேல் தலைநகரம் ஜெருசலம் | உலக நாடுகள் எதிர்ப்பை மீறி டிரம்ப் அறிவிப்பு


ஜெருசலம் நகரை இஸ்ரேலின் தலைநகராக அங்கீகரித்து, அமெரிக்க அதிபர் டிரம்ப் நேற்றிரவு அறிவித்தார்.  ஜெருசலம்தான் தனது தலைநகரம் என இஸ்ரேல் கூறி வருகிறது. ஆனால், கிழக்கு ஜெருசலத்தை இஸ்ரேல் ஆக்கிரமித்துள்ளதாக குற்றச்சாட்டு உள்ளதால், அது சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்படவில்லை. இதனால் பல நாடுகளின் தூதரகங்கள் டெல் அவிவ் நகரில் தான் செயல்படுகின்றன.  கிழக்கு ஜெருசலம் விவகாரம் இஸ்ரேல்-பாலஸ்தீனம் இடையே தீராத பிரச்னையாக உள்ளது. இரு நாடுகள் இடையே அமைதி ஏற்படாமல் காசா எல்லையில் தீவிரவாத தாக்குதல் தொடர்வதற்கும் இந்த நகரம்தான் முக்கிய காரணமாக இருக்கிறது.

இந்நிலையில், ஜெருசலம் நகரை இஸ்ரேலின் தலைநகரமாக அங்கீகரித்து, அமெரிக்க அதிபர் டிரம்ப் நேற்றிரவு அதிரடியாக அறிவித்தார். மேலும், டெல் அவிவ் நகரில் உள்ள அமெரிக்க தூதரக்தை ஜெருசலத்துக்கு உடனடியாக மாற்றவும் அவர் உத்தரவிட்டார். ஜெருசலத்தை இஸ்ரேலின் தலைநகரமாக அறிவிக்க, அமெரிக்கா பல ஆண்டுகளாக முயற்சித்து வருகிறது. இதற்கு முன்பிருந்த அதிபர்கள்,  உலக நாடுகளின் எதிர்ப்பு காரணமாக இதை நிறைவேற்றாமல் இருந்தனர். கடந்தாண்டு தேர்தலில் போட்டியிட்டபோது டிரம்ப்பும் இந்த வாக்குறுதியை அளித்தார். அதன்படி, நேற்று இதை நிறைவேற்றி காட்டினார்.

இந்த அறிவிப்பை வெளியிட்டு வெள்ளை மாளிகையில் டிரம்ப் பேசுகையில், ‘‘இது நீண்ட காலமாக நிலுவையில் இருந்த விஷயம். இந்நகரம் மூன்று முக்கிய மதங்களின் இதயமாக இருக்கிறது. இனிமேல், உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடுகளில் ஒன்றான இஸ்ரேலின் இதயமாகவும் இருக்கும்’’ என்றார். இந்த முடிவை அறிவிக்கும் முன்பாக,  பாலஸ்தீனம், ஜோர்டன், சீனா மற்றும் சவுதி தலைவர்களுடன் டிரம்ப் தொலைபேசியி–்ல் பேசினார். இது அபாயகரமான நடவடிக்கை என்றும், இதற்கு அவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இருப்பினும் அவற்றை மீறி ஜெருசலத்தை தலைநகரமாக டிரம்ப் அறிவித்தார்.Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

8 + 3 =