பயங்கரவாத தாக்குதல் சதி முறியடிப்பு | பிரான்ஸ்


பிரான்ஸ் ராணுவத் தளங்களுக்கு எதிராக பயங்கரவாதத் தாக்குதல் நிகழ்த்தத் தீட்டிய சதி முறியடிக்கப்பட்டதாக அந்நாட்டு உள்துறை அமைச்சர் பெர்னார்ட் கஸனூவ் கூறினார்.
இதுதொடர்பாக தலைநகர் பாரிஸில் வியாழக்கிழமை செய்தியாளர்களிடம் அவர் தெரிவித்ததாவது:
ஃபிரான்ஸின் தெற்குப் பகுதியில் அமைந்துள்ள ராணுவ தளம் மீது பயங்கரவாதத் தாக்குதல் சதித் திட்டம் தீட்டப்பட்டது தெரிய வந்தது.
மேலும், அங்கு ராணுவ வீரர் அல்லது அதிகாரியின் தலையைத் துண்டிக்க பயங்கரவாதிகள் திட்டமிட்டனர். தலை துண்டிப்பைப் படம் பிடித்து, சமூக வலைதளங்களில் வெளியிடவும் திட்டமிட்டிருந்தனர்.
சதித் திட்டம் குறித்து தகவல் கிடைத்ததும் அது தொடர்பாக நான்கு நபர்கள் திங்கள்கிழமை கைது செய்யப்பட்டனர். இவர்கள் 16 முதல் 23 வயது வரையிலான இளைஞர்கள். இவர்களில் ஒருவர் ஃபிரான்ஸ் நாட்டு கடற்படையில் பணியாற்றியவர்.
தாக்குதல் நடத்தத் திட்டமிட்டவர்கள், தங்கள் சதித் திட்டம் நிறைவேறியதும், இஸ்லாமிய தேச (ஐ.எஸ்.) பயங்கரவாதிகளின் பிடியில் உள்ள சிரியா பகுதிக்குத் தப்பிச் செல்லத் திட்டமிட்டிருந்தனர்.
கைது செய்யப்பட்ட நபர்களை, உளவுப் பிரிவினர் விசாரித்து வருகின்றனர்.
பிரான்ஸýக்கு எதிரான பயங்கரவாதத் தாக்குதலை சரியான நேரத்தில் கண்டுபிடித்து முறியடுத்துள்ள பாதுகாப்புப் படையினருக்குப் பாராட்டுகள் என்று அமைச்சர் கஸனூவ் தெரிவித்தார்.
ஐரோப்பிய நாடுகளிடையே பிரான்ஸில்தான் மிக அதிக அளவில் முஸ்லிம்கள் வசிக்கின்றனர்.
ஜிகாத், பயங்கரவாதம் தொடர்பாக சுமார் 1,850 பேர் அந்நாட்டு உள்துறையின் கண்காணிப்பில் உள்ளனர்.
பதற்றம் நிறைந்த பகுதிகள் எனக் கருதப்படும் இடங்களில் 30 ஆயிரம் போலீஸார் காவலில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
முகமது நபியின் கேலிச்சித்திரம் வெளியிட்ட “சார்லி ஹெப்டோ’ பத்திரிகை அலுவலகத்தில் ஆசிரியர் குழுவினரை பயங்கரவாதிகள் சுட்டுக் கொன்றது உள்ளிட்ட பல்வேறு பயங்கரவாதத் தாக்குதல் சம்பவங்கள்
பிரான்ஸில் நடைபெற்று 6 மாதங்களுக்குப் பிறகு இப்போது பயங்கரவாதத் தாக்குதல் சதி முறியடிக்கப்பட்டுள்ளது.
தலைநகர் பாரிஸில் ஜனவரியில் நடைபெற்ற அந்தப் பயங்கரவாத சம்பவங்களில் 17 பேர் உயிரிழந்தனர்.Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *