குடும்ப அரசியல் | வடகொரியாவிலும் தொடருகிறது


இந்தியாவில் தமிழகம், சில மாநிலங்கள் மற்றும் தேசிய கட்சிகளி்ல் தொடரும் குடும்ப அரசியலை போன்று வடகொரியாவிலும் குடும்ப அரசியல் கலாசாரம் துவங்கியுள்ளது.
வடகொரியாவின் தொழிலாளர் கட்சியை சேர்ந்த கிங்ஜாங் உன் அதிபராக பதவி வகித்து வருகிறார். அதிபரின் தங்கை கிம்யோயாங் (26 ) இவர் தனது சகோதரரின் நம்பிக்கை உரியவராகவும் அனைத்து அரசு நிகழ்சிகளின் பங்கேற்பவராகவும் இருந்து வந்தார்.இருப்பினும் அரசு பதவிகளில் இவரின் பங்கு மற்றும் பொறுப்பு குறித்து அந்நாட்டின் அரசு அதிகாரிகள் மற்றும் பொது மக்கள் எதுவும் தெரியாமல் தவித்து வந்தனர்.

இந்நிலையில் அந்நாட்டின் தொழிலாளர் கட்சியின் மத்திய துறை தலைவராக கிம்யோயாங் நியமிக்கப்பட்டிருப்பதாக செய்திநிறுவனம் கேசிஎன்ஏ தெரிவித்துள்ளது.

முன்னதாக தொழிலாளர் கட்சியில் கிம்யோயாங்கின் அத்தையான கிம்கியோங்ஹூய் மத்திய துறை தலைவர் பொறுப்பு வகித்து வந்தார். கிம்யோயாங்கின் கணவர் ஜாங்சாங்தேக் மீது மரண தண்டனை விதிக்கப்பட்டது. இதனையடுத்து பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்பதை கிம்கியோங் தவிர்த்து வந்த நிலையில் தற்போது கிம்யோயாங்கிற்கு கட்சி பொறுப்பு வழங்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *