தாய்வானின் புகையிரத விபத்தில் 18 பேர் பலி!


 

தாய்வானின் வட கிழக்குப் பகுதியில் சுமார் 366 பேருடன் பயணித்த
புகையிரதத்தின் 8 பெட்டிகள் தடம் புரண்டதில் சுமார் 18 பேர் உயிரிழந்துள்ளதோடு, 170 பேர் காயமடைந்துள்ளனர்.

இந்த விபத்து தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதாக அந்நாட்டு புகையிரத திணைக்கள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Puyuma Express 6432 என்ற குறித்த புகையிரதம், தலைநகரிலிருந்து கிட்டத்தட்ட 70 கி.மீ. தொலைவில் சுயாவோ (Su’ao) நகரிலுள்ள ஸின்மா புகையிரத நிலையத்திற்கு அருகே தண்டவாளத்திலிருந்து விலகியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

விபத்தில் காயமடைந்தவர்களை மீட்கும் பணியில் தீயணைப்புப் படை வீரர்கள் ஈடுபட்டு வருகின்ற நிலையில், அவர்களுக்கு உதவியாக 120 படை வீரர்களை அனுப்பியுள்ளதாக பாதுகாப்பு அமைச்சு குறிப்பிட்டுள்ளது.Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *