தமிழ் பரா விளையாட்டுப் போட்டிகள் – மட்டக்களப்பு விழாக்கோலம் [படங்கள் இணைப்பு] 


ஆண்டுதோறும் இலங்கையில் வடக்கிலும் கிழக்கிலும் நடைபெறும்   தமிழ் பரா விளையாட்டுப் போட்டிகள் தற்போது  மட்டக்களப்பில் நடைபெறுகின்றது. இலண்டனை தளமாகக் கொண்டு இயங்கும் மாற்றுத்திறனாளிகளுக்கான அமைப்பான டேட்டா (DATA) ஐபிசி தமிழ் மற்றும் நம்பிக்கை ஒளி ஆகியோருடன் இணைந்து மூன்றாவது வருடமாக நடாத்துகின்றது.

நேற்றும் இன்றும்  மட்டக்களப்பில்  நடைபெற்றுவரும்   தமிழ் பரா விளையாட்டுப் போட்டிகளில் பெருமளவான  மாற்றுத்திறனாளிகள் உற்சாகத்துடன் கலந்துகொண்ட வண்ணம் இருக்கின்றார்கள்.

வெற்றிபெற்றவர்களுக்கு மதிப்பளிப்பு வைபவமும் நடந்த வண்ணம் உள்ளது. இப்போட்டிகளுக்கு நிதியீட்டும் முயற்சியில் இம்மாதம் 8ம் திகதி இலண்டனில் நடைபவனி நடைபெற்றமையும் இலண்டனைச் சேர்ந்த இளையோரும் சிறுவர்களும் தமது பங்களிப்பை செய்தமை அறிந்ததே.Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *