அன்பு நண்பா!


உன் எள் நுனி வாழ்க்கை

இன்னும் உலரவில்லை

காற்றை பிளக்கும்

உளியென அலைகிறாய்.

மிஞ்சிய மரணத்துடன்

கசங்கிய பாதையில்

கனவொன்றை

புதைத்து மீள்கிறேன்.

உன் அவகாசங்களில்

யாழ் எடுக்க மறந்தால்

உன் நிழல் நகராத

ஒரு நிலத்தில்

உற்று பார் நண்ப…

என் கனவு சொல்லும்

நம்மை தட்டிப்பிரித்த

கால விரிசல்களை…

இரு…

பழுதுண்ட என் கனவு

இனி நீ பற்றிச்செல்…

பூக்கள் உன்னையும்

புரிந்துகொள்ளும்.

 

நன்றி : ஸ்பரிசன் | எழுத்து.காம்3 thoughts on “அன்பு நண்பா!

  1. எழுத்து.காம் இல் பதிப்பித்த என் கவிதையை மீண்டும் இலக்கியசாரலில் பிரசுரித்தமைக்கு மீண்டும் நன்றி.

  2. அழகான ஆழமான கவிதை, உங்கள் அடுத்த கவிதையை வணக்கம் லண்டன் க்கு அனுப்பி வையுங்கள் பிரசுரிக்கின்றோம்.
    நன்றி – வணக்கம் லண்டன் இணையம்
    vanakkamlondon@gmail.com

    1. வணக்கம். தங்களின் கூரிய அன்புக்கும்,நேரிய ஊக்குவிப்புக்கும்…எப்படி அனுப்புவது என்று தெரியவில்லை. விளக்கினால் உதவும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *