திருமண வரம் அருளும் திருக்கல்யாண திருத்தலங்கள்!


திருமண வாழ்க்கைதான் ஒருவரது எதிர்காலத்தை நிர்ணயிப்பதுடன், அடுத்ததொரு செழுமையான  தலைமுறைக்கும் வித்திடுகிறது. அறத்தைச் செயல்படுத்துவதில் முக்கியப் பங்குவகிப்பது திருமணப் பந்தம். ஆனால் சிலருக்கு வசதி வாய்ப்புகள் இருந்தாலும் அவ்வளவு சீக்கிரத்தில் திருமண வரம் கைகூடுவதில்லை. இதற்கு முன்வினை பயன் என்றும், ஜாதக நிலையென்றும் எத்தனையோ காரணங்கள் சொல்லப்படுகின்றன.

அத்தகைய குறைகளைக் களையவும், தடைகளை அகற்றவும் வழியே இல்லையா? உண்டு. கல்யாண வரம் அருளும் கடவுள் வழிபாடுகள் குறித்து ஞானநூல்கள் விவரிக்கின்றன. அவற்றில் ஒன்றுதான் பங்குனி உத்திர வழிபாடும், தரிசனமும். குலம் செழிக்க அருள் வழங்கும் சாஸ்தாவை வழிபட உகந்தத் திருநாள் பங்குனி உத்திரம். அதுமட்டுமா?

மீனாட்சி – சொக்கநாதர், ஸ்ரீராமர் – சீதை, முருகப்பெருமான்-தெய்வானை, நந்தியெம்பெருமான் – சுயசை, ஆண்டாள் – ரங்கமன்னார், இந்திரன் – இந்திராணி… என்று தெய்வத்திருமணங்கள் பலவும் நடைபெற்ற மகத்தான திருநாள் பங்குனி உத்திரம். இந்த நாளில் கல்யாணசுந்தர விரதம் முதலானவற்றைக் கடைப்பிடித்து வழிபடுவதுடன், கல்யாண வரம் அளிக்கும் திருத்தலங்களுக்குச் சென்று தரிசிப்பதால், எல்லாவிதத் தடைகளும் நீங்கி விரைவில் கல்யாண பாக்கியம் ஸித்திக்கும்.

 

நன்றி : மு.ஹரி காமராஜ் | செந்தில்வயல்.காம்

 

 



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *