48 ஆவது பெண்கள் டென்னிஸ் சம்பியன்ஷிப் போட்டி சிங்கப்பூரில் இன்று ஆரம்பம்!


 

சிங்கப்பூரில் இன்று ஆரம்பமாகவுள்ள டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் முன்னணி 8 வீரங்கானைகள் கலந்துகொள்ளும் 48 ஆவது பெண்கள் டென்னிஸ் சம்பியன்ஷிப் போட்டித் தொடர் இன்று சிங்கப்பூரில் ஆரம்பமாகிறது.

டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி எதிர்வரம் 28 ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளது குறிப்பிடத்தக்கது

டென்னிஸ் தரவரிசையில் முதல் 8 இடங்களை பிடிக்கும் வீராங்கனைகள் மட்டுமே பங்கேற்கும் பெண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி கிராண்ட்ஸ்லாம் போட்டிக்கு நிகராக கருதப்படுவதால் இந்த போட்டித் தொடர் மீது எப்போதும் மிகுந்த எதிர்பார்ப்பு காணப்படும்.

இப் போட்டித் தொடருக்கு முதல் வீராங்கனையாக தகுதி பெற்றிருந்த ‘நம்பர் ஒன்’ புயல் சிமோனா ஹாலெப் (ருமேனியா) காயம் காரணமாக விலகி விட்டார். அவருக்கு பதிலாக இளம் நட்சத்திர வீராங்கனை நெதர்லாந்தின் கிகி பெர்டென்ஸ் சேர்க்கப்பட்டார். 23 கிராண்ட்ஸ்லாம் வென்ற சாதனை நாயகி செரீனா வில்லியம்ஸ் (அமெரிக்கா) இந்த முறை தகுதி பெறவில்லை.

இதில் களம் காணும் வீராங்கனைகள் ‘ரெட்’, ‘ஒயிட்’ என்று இரண்டு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளனர். இதன்படி ‘ரெட்’ பிரிவில் ஏஞ்சலிக் கெர்பர் (ஜெர்மனி), நவோமி ஒசாகா (ஜப்பான்), ஸ்லோனே ஸ்டீபன்ஸ் (அமெரிக்கா), கிகி பெர்டென்ஸ் (நெதர்லாந்து) ஆகியோரும், ‘ஒயிட்’ பிரிவில் நடப்பு சாம்பியன் கரோலின் வோஸ்னியாக்கி (டென்மார்க்), பெட்ரா கிவிடோவா, கரோலினா பிளிஸ்கோவா (இருவரும் செக்குடியரசு), எலினா ஸ்விடோலினா (உக்ரைன்) ஆகியோரும் இடம் பிடித்துள்ளனர்.

ஒவ்வொரு வீராங்கனையும் தங்கள் பிரிவில் உள்ள மற்றவர்களுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். ரவுண்ட் ராபின் சுற்று முடிவில் இரு பிரிவிலும் முதல் இரு இடங்களை பிடிப்பவர்கள் அரையிறுதிக்கு தகுதி பெறுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

 Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *