பெண்களின் அனைத்து விதமான கருப்பை பிரச்சனைகளைப் போக்க!


நமது தேசத்தின் பாரம்பரிய மரம், அசோக மரம். பெரும்பாலும் அடர்ந்த வனங்களில் அதிகம் காணப்படும் மரங்களாக திகழும் அசோகமரம், நமது மாநிலத்தில், மேற்குத் தொடர்ச்சி மலைகளில் சில இடங்களில் காணப்படுகின்றன. பழமையான மரமாதலால், அரிதாகக் காணப்படுகின்றன இந்த மரங்கள்.

ஆரஞ்சு வண்ணத்தில் மலரும் மலர்கள், சில நாட்களில், கண்களைப் பறிக்கும் அடர் சிவப்பு வண்ணத்தை அடைந்து கிளைகளில் கொத்து கொத்தாக மலரும். அசோகமரங்கள், பசுமையான அடர்ந்த இலைகளைக் கொண்டவை.

இத்தகைய பெருமை வாய்ந்த அசோகமரங்களை, சிலர் பிற்காலத்தில் நமது நாட்டுக்கு வந்த நெட்டிலிங்க மரம்தான், அசோகமரங்கள் என்று கூறுகின்றனர். அது, இது அல்ல. அவை சாலையோரங்களில், பண்ணை வீடுகளில், மலைப்பகுதிகளில் அழகுக்காக வளர்க்கப்பட்டவை.

அசோகமரங்கள் மிக அரிய பயன்களை பெண்களுக்குத் தரவல்லவை. ஒரு தாய் தன் மகளுக்கு எப்படி நல்ல விசயங்களைப் பார்த்துப் பார்த்து செய்வாளோ அதைப்போல, சொல்லப்போனால் அதையும் விட மேலாக, பெண்களின் உடல் நலம் காக்கும் தன்மைமிக்கவை.

பொதுவாக பேதி மற்றும் வயிற்றுப் போக்கு பாதிப்புகளை சரிசெய்யும், உடல் சூட்டில் ஏற்படும் பித்த வியாதிகள், சிறுநீரக சர்க்கரை பாதிப்புகள், இரத்த அழுத்த கோளாறுகள் மற்றும் பெண்களின் வெள்ளைப்படுதல், கருப்பை பாதிப்புகளை சரியாக்கும்.

பெண்களின் மனம் செம்மையாவது எப்போது என்றால், தானும் தாய்மைப்பேறு பெற்று, வயிற்றில் சுமந்து பெற்ற பிள்ளையைப் பாலூட்டி தாலாட்டும்போதுதான்.

உலகில், வசதி வாய்ப்பு, ஏழை, பணக்கார பேதமின்றி, எல்லோருக்கும் வாய்க்கும் இந்த இயற்கை நிகழ்வு, ஏனோ சிலருக்கு கிட்டுவதில்லை.

இதனால் ஏற்படும் மன உளைச்சல்கள், பெண்களை மிகவும் வருத்தும் ஒரு பாதிப்பாகி விடுகிறது.

அன்னை சீதாபிராட்டி, கொடிய சிறையில் வாடியபோது, அவள் வாட்டம் தணித்து, மனதில் நம்பிக்கை ஊட்டி, அவள் உயிரைக் காத்தது மட்டுமல்ல, அவளை துன்பங்கள் அதிகம் நெருங்காமல் காத்து நின்ற மரங்கள் தான், அசோகமரங்கள். அவை, மகளிரின் மனதை வாடவிடாமல் காக்கும் இயல்புமிக்கது.

பெண்களின் மகப்பேறின்மைக்கு முதன்மை காரணமாக விளங்குவது, கருப்பை பாதிப்புகளே, அந்த பாதிப்புகளை சரியான முறையில் சரிசெய்கிறது, அசோகமரம்.

அசோக மரத்தின் பட்டைகளை சேகரித்து, அவற்றை நன்கு உலர்த்தி, தூளாக்கி வைத்துக்கொள்ளவும். இந்த தூளை சிறிதளவு எடுத்து, அதில் சிறிது தூளாக்கிய எள்ளைக் கலந்து அரை லிட்டர் நீரில் நன்கு சூடாக்கி, தண்ணீர் மூன்றில் ஒரு பங்கு அளவில் சுண்டி வந்ததும், அந்த நீரை தினமும் இரு வேளை பருகி வர வேண்டும்.

சில நாட்களில் உடலில் உள்ள பாதிப்புகள் படிப்படியாக விலகுவதை உணர முடியும். விரைவில், குழந்தைகள் இல்லாத வீட்டில், குவாகுவா சத்தம் கேட்டு, எல்லோரும் மகிழ்ச்சி அடைவார்கள்.

பெண்களின் தாய்மை பாதிப்பை சரிசெய்து, அவர்களை மன நிம்மதி அடைய வைத்ததுபோல, இளம் பெண்களின் மற்றொரு பிரச்னையையும் சரிசெய்யும் ஆற்றல் மிக்கது, அசோகமரம்.

பெண்களுக்கு மாதாந்திர விலக்கின் போது, அதிகமாக உதிரப்போக்கு ஏற்படும், சிலரின் உடல்வாகு மற்றும் கருப்பை தொற்று, உடலின் வியாதி எதிர்ப்பு ஆற்றல் குறைவது போன்ற காரணங்களால், இரத்தப்போக்கு அதிகமாக இருக்கலாம்.

இந்த பாதிப்பு மாதாமாதம் தொடர்ந்தால், உடல் பலகீனமாகி, இரத்த சோகை ஏற்பட்டு, உடல் நிலை பாதிப்படையும் நிலை ஏற்பட்டுவிடும். இதைத் தவிர்க்க,

அசோகம்பட்டையை தூளாக்கி, அதை சிறிது எடுத்து, தயிர் அல்லது கெட்டி மோரில் கலந்து தினமும் இருவேளை மருந்து போல பருகி வர, மிகையாக ஏற்பட்ட இரத்தப் போக்கு நின்று, உடல் நலமாகும்.

பெண்களின் இயல்பான மாதாந்திர விலக்கு என்பது அவர்களின் ஆரோக்கியத்தை உணர்த்துவதாகும், இக்காலத்தில், உணவுகளில் கட்டுப்பாடுகள் இன்றி, கிடைக்கும் உணவை சாப்பிடும் கலாச்சாரம் பரவி விட்டது. வீட்டில் இருந்து சாப்பாடு எடுத்துச் சென்று சாப்பிடும் தன்மைகள், தற்காலங்களில் மறைய ஆரம்பித்து விட்டன.

சிலருக்கு காலை சிற்றுண்டி மதிய உணவு இரண்டுமே வெளியில்தான் என்பதை தவிர்க்க முடியாவிட்டாலும், மதிய உணவே சிற்றுண்டி போல, துரித உணவுகளாக அமைவது தான், வருந்தத் தக்கது.

இந்த செயல்கள் எல்லாம் பெண்களின் மாதாந்திர விலக்கின் சமயத்தில் அதிகம் பாதிப்பை அற்படுத்துகிறது. ஒழுங்கற்ற விலக்கின் காரணமாக, மன அழுத்தம், சோர்வு போன்றவை இயல்பைவிட அதிகம் ஏற்பட்டு, இந்த பாதிப்புகளே, உடல் அளவிலும் பலவீனத்தை உண்டாக்கிவிடுகிறது.

இதுபோன்ற பாதிப்புகளைக் களைவதில், அசோகமரத்தின் பட்டைகளே, மீண்டும் கைகொடுக்கும்.

அசோக மரப்பட்டைகள், மாவிலங்கப் பட்டைகள், சீரகம் மற்றும் சுக்கு இவற்றை உலர்த்தித் தூளாக்கி எடுத்துக் கொள்ளவும்.

அசோகமரப்பட்டை தூளை சிறிதளவு எடுத்துக்கொண்டு, அதில் பாதியளவு மாவிலங்கப்பட்டைத்தூள் மற்றும் சிறிது சீரகம் மற்றும் சுக்குத்தூள் இவற்றை ஒன்றாகக் கலந்து, இந்தத் தூளை சிறிதளவு தினமும் இருவேளை சாப்பிட்டு, தேன் கலந்த நீரைப்பருகி வர, மாதாமாதம் தொல்லை தந்து வந்த, உடல் நல பாதிப்புகள் விலகி, பெண்கள் முக மலர்ச்சியுடன் காணப்படுவார்கள்.

ஆயினும், அதிக மசாலாக்கள் நிறைந்த துரித உணவுகள், சாஃப்ட் டிரிங்க்ஸ் போன்றவற்றை அடிக்கடி சாப்பிடுவதைத் தவிர்த்தால், நலமாகும்.

சில பெண்களுக்கு கருப்பை சுருங்குதல் மற்றும் கருப்பை தொற்று காரணமாக, மாதாந்திர விலக்கின்போது, வலி ஏற்படும். இதனால், அன்றாட வேலைகளில் ஈடுபாட்டுடன் செயல்பட முடியாமல், சோர்வாகக் காணப்படுவார்கள்.

இந்த பாதிப்பை சரிசெய்ய, அசோகமரப் பட்டைத்தூளுடன் சிறிதளவு பெருங்காயத் தூளைக் கலந்து, இந்தத் தூளை சிறிது வெண்ணையில் கலந்து தினமும் இருவேளை சாப்பிட்டு வர, மாதாந்திர வலிகள், விலகி, இயல்பான விலக்கு ஏற்படும்.

அசோகப்பட்டைகள் மட்டும்தான் என்றில்லை, அதன் இலைகள், காய்கள் மற்றும் பழங்கள் போன்றவையும் நல்ல பலன்கள் தர வல்லவையே.

மேலும், அசோக மரப்பட்டைகள் பேதி மற்றும் வயிற்றுப்போக்கை கட்டுப்படுத்தும் தன்மை மிக்கவையாக இருப்பதால், இந்த மருந்தை உட்கொள்ளும்போது, மலம் கழிப்பதில் சிரமம் அல்லது மலச்சிக்கல் பாதிப்புகள் ஏற்பட்டால், கடுக்காய் அல்லது திரிபலா சேர்த்து சாப்பிட மலச்சிக்கல் பாதிப்புகள் விலகும்.Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *