முருகனுக்கு உகந்த நாளான தைப்பூசத்தின் வரலாறு!


தைப்பூச நன்னாள் முருகனுக்கு மிகவும் உகந்த நாளாக கருதப்படுகிறது. முருக பத்தர்கள் பலர்  விரதம் இருந்து, காவடி எடுத்து, அலகு குத்தி முருகனை வழிபடுவது வழக்கம். இந்த நாள் முருகனுக்கான நாளானதற்கு பின் ஒரு அற்புதமான வரலாறு உள்ளது. அதை இப்போது பார்ப்போம்.

சிவன் அசுரர்களுக்கு அளித்த வரம் காரணமாக சூரபத்மன், தாரகாசுரன், சிங்கமுகன் ஆகிய மூன்று அசுரர்களும் பல அற்புத சக்திகளை பெற்றனர். ஒரு கட்டத்தில் அவர்கள் தேவர்களை சிறைபிடிக்க தொடங்கினர். இதனால் தேவர்கள் அவர்களுக்கு அஞ்சி மறைந்து வாழும் நிலை உண்டானது. தங்களது இக்கட்டான சூழலை மகாதேவரிடம் தெரிவித்த தேவர்கள், தங்களை எப்படியாவது அசுரர்களிடம் இருந்து காக்கும்படி வேண்டினர்.

அசுரர்களை அழிப்பதற்காக சிவன் தன் நெற்றிக்கண்ணில் இருந்து 6 தீப் பிழம்புகளை உருவாகினர். அந்த 6 தீப்பிழம்புகளும் 6 குழந்தைகளாக மாறின. அந்த 6 குழந்தைகளும் கார்த்திகை பெண்களிடம் வளர்ந்தது. கார்த்திகை பெண்கள் அந்த 6 குழந்தைகளுக்கும் போர் கலை பயற்சி அளித்தனர். பிறகொரு நாள் அன்னை பார்வதி தேவி வந்து தன் 6 புத்திரர்களையும் ஒருசேர அணைக்க, அறுவரும் இணைத்து ஒருவராக மாறினர்.

6 குழந்தைகளின் சக்தியும், ஆற்றலும், அறிவும் ஒருங்கிணைத்து தோன்றிய முருகன் பல கலைகளில் சிறந்து விளங்கினார்.
அசுரர்களின் பாவக்குடம் நிறைந்து அவர்களின் அழிவு காலம் வந்த போது பழனியில் ஆண்டிக்கோலத்தில் இருந்த முருகனுக்கு ஞானவேலை கொடுத்தார் அன்னை பார்வதி தேவி. அப்படி அந்த ஞானவேல் கொடுக்கப்பட்ட தினமே தைப்பூச தினமாகும். அந்த ஞானவேல் கொண்டே கந்தன் அசுரவதம் புரிந்து தேவர்களை காத்தருளினார். அந்த அசுரவதம் நடந்த இடம் தான் திருச்செந்தூர்.

பழனி முருகன் ஞானவேலை பெற்றதால் மற்ற முருகன் கோவில்களை காட்டிலும் தைப்பூச விழாவானது பழனி முருகன் கோவிலில் வெகு விமர்சையாக கொண்டாடப்படுவது வழக்கம். இந்த நன்னாளை நோக்கி முருகன் பக்தர்கள் துளசி மாலை அணிந்து 48 நாட்கள் விரதம் இருந்து பழனிக்கு சென்று முருகனை தரிசிப்பது வழக்கம்.

 

நன்றி : தினபூமிLeave a Reply

Your email address will not be published. Required fields are marked *