கால்பந்தாட்ட அணியை மீட்க 1 அல்லது 2 மாதங்கள் தேவை!


 

தாய்லாந்தில் கடந்த 10 தினங்களாக காணாமல் போயிருந்து நிலையில் மீட்கும் பணியில் ஆயிரம் பேருக்கும் அதிகமான இராணுவத்தினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கவிடயமாகும்.

இது இவ்வாறு இருக்க அவர்கள் கண்டுபிடிக்கப்பட்ட 12 பேர் கொண்ட இளையோர் கால்பந்தாட்ட அணியும் அதன் பயிற்சியாளரையும் மீட்க மேலும் தாமதமாகலாம் என தெரிவிக்கப்படுகிறது.

சுமார் ஒன்று தொடக்கம் இரண்டு மாதங்கள் வரையில் கூட செல்லாம் என தெரிவிக்கப்படுகிறது. தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்டு வந்த தேடுதலின் போது நேற்றைய தினம் இரண்டு இங்கிலாந்து நீர்மூழ்கி வீரர்கள் அவர்கள் இருக்கும் இடத்தை கண்டுபிடித்தனர்.

எனினும் அவர்களை நெருங்க முடியாத நிலையில் அவர்களுடன் கலந்துரையாடி விட்டு நீர்மூழ்கி வீரர்கள் இருவரும் கரை திரும்பியுள்ளனர்.

இந்த நிலையில் அவர்கள் குகைக்குள் உயிருடன் இருப்பது மற்றும் உரையாடுவது போன்ற காணொளிகள் தற்போது வெளியிடப்பட்டுள்ளன.

அவர்கள் அனைவரும் நலமுடன் இருப்பது அதில் தெரிகின்றது. இந்தநிலையில் அவர்களை வெளியே கொண்டுவர சிரமங்கள் காணப்படுவதாகவும் வெள்ள நீரை வெளியேற்றும் பணிகள் தற்போது இடம்பெற்று வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இவர்கள், கடந்த 23ஆம் திகதி, வடக்கு தாய்லாந்தின் சியங்ராய் பிரதேசத்தின் வனப்பகுதியில் மலையேறும் பயிற்சி மேற்கொண்டனர்.

அதன்போது மலைப்பகுதியில் கனமழை பெய்ததன் காரணமாக 13 பேரும் அங்குள்ள குகை ஒன்றில் ஒதுங்கியுள்ளனர்.

அதன்பிறகு அவர்களை காணவில்லை. 12 தொடக்கம் 16 வயதுகளைக் கொண்ட சிறுவர்களும் அவர்களின் பயிற்சியாளருமே இவ்வாறு காணமல் போயிருந்தனர்.

இந்தநிலையில் நேற்று கண்டுபிடிக்கப்பட்ட அவர்களுக்கு மருத்துவ உதவிகள் மற்றும் உணவு என்பன வழங்கப்பட்டு வருவதாக செய்திகள் தெரிவிக்கின்றன.Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *