நன்றி கூறும் பொங்கல் தினம்


இறைவனுக்கு எமது நன்றி

ஆதவனுக்கு எமது நன்றி

இயற்கையன்னைக்கு எமது நன்றி

வர்ணபகவானுக்கு எமது நன்றி

பூமாதேவிக்கு எமது நன்றி

அக்கினிபகவானுக்கு எமது நன்றி

ஆகாயத்துக்கு எமது நன்றி

காற்றுக்கு எமது நன்றி

ஏருக்கு எமது நன்றி

எம்மோடு உழைத்த கால்நடைகளுக்கு எமது நன்றி

விளைந்த நெற்பயிர்களுக்கு எமது நன்றி

பானையை சுமந்த அடுப்புக்கு எமது நன்றி

தீயை எரிய வைத்த விறகுக்கு எமது நன்றி

சருக்கரை,பால்,நெய், தானியங்களுக்கு எமது நன்றி

பழங்கள்,கரும்பு,வாழை,தேங்காய் மற்றும் பொருட்களுக்கு எமது நன்றி

பிள்ளையாருக்கும் அறுகம் புல்லுக்கும் எமது நன்றி

கோலம் இட்ட கோதையருக்கு எமது நன்றி

நான்கு பொங்கல் தினங்களுக்கு எமது நன்றி

பழையன் கழித்த போகி தினத்துக்கு எமது நன்றி

தைப்பொங்கல் தினமன்று தை தாயுக்கு எமது நன்றி

மாட்டுப் பொங்கல் தினத்துக்கு எமது நன்றி

நோய், பிணி, கவலைகள் போக்கும் இறைவனுக்கு எமது நன்றி

உறவினர்கள், நண்பர்களை காணும் தினத்துக்கு எமது நன்றி

பொங்கலை புகழ்ந்த சங்க இலக்கியங்களுக்கு எமது நன்றி

தமிழ் தாயுக்கும், மக்களுக்கும் ஒற்றுமைக்கும் எமது நன்றி

ஈழத்தில் எமது உரிமைக்குப் போராடிய மாவீரர்களுக்கு எமது நன்றி

வாழ்க தமிழ்மொழி ஓங்குக தமிழ் இனம் வளர்க தமிழன் ஒற்றுமை

நன்றி பொன் குலேந்திரன்

 Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *