தாமரைச்செல்வியின் உயிர்வாசம் நூல் வெளியீட்டு விழா | IBC தமிழின் வணக்கம் தாய்நாடு


கிளிநொச்சி பரந்தன் குமரபுரத்தில்  டந்த 23ம் திகதி சுப்பிரமணியம் இராசம்மா மணிமண்டப திறப்பு விழா வெகு விமர்சையாக நடைபெற்றது.

அதனைத் தொடர்ந்து எழுத்தாளர் தாமரைச்செல்வியின் “உயிர்வாசம்” நூல் வெளியீடும் இடம்பெற்றது. இதில் இலக்கியவாதிகள் மாத்திரமின்றி பொதுமக்களும் கலந்து சிறப்பித்தனர்.

இதேவேளை, கிளி மக்கள் அமைப்பின் 1001 துவிச்சக்கர வண்டிகள் வழங்கும் திட்டத்தின் நிறைவு நிகழ்வுடன் புலமைப்பரிசில் பரீட்சையில் கிளி மாவட்டத்தில் அதிகூடிய புள்ளிகளைப் பெற்ற முதல் 10 மானவர்களுக்கு மதிப்பளிப்பு நிகழ்வும் இதன்போது இடம்பெற்றது.

தாயகத்தில் இடம்பெற்ற இந்த நிகழ்வுகளை புலம்பெயர் நாடுகளுக்கு எடுத்துச் செல்லும் விதமாகவும் அரியதொரு ஆவணம் ஆக்கும் விதமாகவும் IBC தமிழ் தொலைக்காட்சி தனது “வணக்கம் தாய்நாடு” நிகழ்ச்சியில்  ஒளித்தொகுப்பு செய்து ஒளிபரப்பியுள்ளது.

IBC தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான “வணக்கம் தாய்நாடு” ஒளிப்பதிவை நன்றியுடன் வணக்கம் லண்டன் இங்கே பிரசுரிக்கின்றது.

https://youtu.be/ldcfRBmbgZ4

 Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *