கர்ப்பமாக இருக்கும் போது செய்யவே கூடாத 6 விஷயங்கள்..


கர்ப்பமாக இருக்கும் போது செய்யவே கூடாத 6 விஷயங்கள் இவைதான்… மீறி செஞ்சா குழந்தைக்கு இதெல்லாம் நடக்கலாம்…

ஒவ்வொரு பெண்ணுக்கும் கர்ப்ப காலம் என்பது கவனமாக இருக்க வேண்டிய காலகட்டமாகும்.

ஏனெனில் குழந்தையின் வளர்ச்சி என்பது தாயின் உடல் நலனை பொருத்தே இருக்கிறது.

கர்ப்பமாக இருக்கும் ஒன்பது மாதங்களும் கவனமாக இருக்க வேண்டும். எனவே தான் கர்ப்ப காலத்தில் சில முக்கியமான விஷயங்களைச் செய்யக் கூடாது என்கிறார்கள் மருத்துவர்கள். சில விஷயங்களை நீங்கள் தவறாக கடைபிடிக்கும் போது அது குழந்தையின் வளர்ச்சியில் பாதிப்பை ஏற்படுத்தக் கூடும். மேலும் உங்கள் பிரசவ காலத்தை சிக்கலாக்கவும் வாய்ப்புள்ளது. அப்படிப்பட்ட 6 விஷயங்களை பற்றித் தான் இக்கட்டுரையில் நாம் காணப் போகிறோம்.

இந்த உணவுகள் வேண்டாம்
இறைச்சி வகைகள், மெர்குரி அதிகமான மீன் வகைகள், பச்சையாக முட்டை எடுப்பது, கருகிய கடல் வகை உணவுகள், பதப்படுத்தப்பட்ட பால் போன்ற உணவுகளை கர்ப்ப காலத்தில் எடுத்துக் கொள்வதை தவிருங்கள். அதற்குப் பதிலாக நீங்கள் ஆரோக்கியமான உணவு வகைகளை எடுத்துக் கொண்டு வரலாம். மெலிந்த புரத உணவுகள், ஆரோக்கியமான கொழுப்பு உணவுகள், நிறைய பழங்கள், காய்கறிகள், தண்ணீர் போன்றவற்றை உங்கள் தினசரி உணவில் சேர்த்து வாருங்கள். இதனால் உங்கள் குழந்தையின் வளர்ச்சி சீராக இருக்கும்.

 

காஃபைன் அதிகமாக எடுத்துக் கொள்ளாதீர்கள்

காஃபைன் உங்கள் உடல் நலனை பாதிக்கவில்லை என்றால் கூட உங்கள் வயிற்றில் வளரும் குழந்தையின் உடல் நலனை நிறையவே பாதிக்க வாய்ப்புள்ளது.

ஒரு நாளைக்கு 150 முதல் 300 மி.கி அளவுக்கு அதிகமான காஃபின் உட்கொள்ள வேண்டாம். .காஃபின் தேநீர் மற்றும் காபியில் மட்டுமல்ல, சாக்லேட்டுகள், சோடாக்கள் மற்றும் சில மருந்துகளில் கூட காணப்படுகிறது என்பதை நினைவில் கொண்டு கர்ப்ப காலத்தில் செயல்படுங்கள்.

 

 மருந்துகளில் மிக கவனம்
 

மருத்துவர் பரிந்துரைக்காமல் மருந்துகளை எடுத்துக் கொள்ளாதீர்கள். கர்ப்ப காலத்தில் நீங்களாகவே மருந்துகளை எடுத்துக் கொள்வதை தவிருங்கள். எந்தவொரு மருந்து மாத்திரைகளையும் எடுத்துக் கொள்வதற்கு முன் உங்கள் மருத்துவரிடம் ஆலோசனை பெற்ற பிறகு செய்யுங்கள்

.

சூடான பாத்டப் குளியல் வேண்டாம்

 

கர்ப்ப காலத்தில் உடம்பு, கை கால் வலி அதிகமாகவே இருக்கும். எனவே அந்த மாதிரியான சமயங்களில் சூடான பாத்டப் குளியல் செய்யத் தோன்றும். இது உங்களுக்கு ரிலாக்ஸாக இருந்தாலும் உடல் வெப்ப நிலையை அதிகரிப்பதால் முதல் பருவ காலத்தில் பிறப்புக் குறைபாடு ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே சூடான குளியலுக்கு பதிலாக வெதுவெதுப்பான குளியலைத் தேர்ந்தெடுங்கள்.

 

 நீண்ட நேரம் உட்காரவோ நிற்கவோ வேண்டாம்
 

கர்ப்ப காலத்தில் ஒரே இடத்தில் நீண்ட நேரம் உட்காருவது, நிற்பது போன்றவை சிக்கலை ஏற்படுத்தும். இது கணுக்கால் வீக்கம் மற்றும் நரம்பு பிரச்சனைகளுக்கு வழி வகுக்கும்.

எனவே நீண்ட நேரம் ஒரே இடத்தில் உட்காராமல் கொஞ்சம் தூரம் அப்படியே காலார நடந்து வரலாம். உட்கார்ந்து இருந்தால் கால்களை நாற்காலியின் மேல் வைத்து அமருங்கள். இது உங்களுக்கு செளகரியமாக இருக்கும்.

 

​படித்த அனைத்தையும் நம்ப வேண்டாம்

 

அறிவை வளர்ப்பது நல்லது தான், ஆனால் கர்ப்ப காலத்தில் மற்றவர்கள் சொல்லும் கருத்து நீங்கள் படிப்பது இவற்றை கண்மூடித்தனமாக நம்பி செயல்படாதீர்கள். உங்களுக்கு ஏதேனும் சந்தேகம் நேர்ந்தால் உங்கள் மருத்துவரிடம் ஆலோசனை பெற்றுக் கொள்வதே நல்லது. உங்கள் மகப்பேறு நலன் மருத்துவரிடம் பேசி தெளிவு பெறுங்கள்.

 

நன்றி : சமயம்Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *