மீண்டும் திஸ்ஸ அத்தநாயக்க அரசியலுக்குள்!


 

புதிய கட்சி ஒன்றை உருவாக்கி மீண்டும் அரசியலுக்குள் பிரவேசிப்பதாக ஐக்கிய தேசிய கட்சியின் முன்னாள் பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார்.

கடுவலை பிரதேசத்தில் இடம்பெற்ற மத நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களிடம் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

கடந்த காலங்களில் பகிரங்க அரசியலில் இருந்து ஒதுங்கி இருந்ததாகவும், மீண்டும் செயற்பாட்டு அரசியலில் ஈடுபடுவதற்கான வேலைத்திட்டங்களை ஆரம்பித்துக் கொண்டிருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலுக்கான அரசியல் நடவடிக்கைகளை ஆரம்பிப்பதாகவும், அது முன்னாள் ஜனாதிபதிகளான ஜே.ஆர். ஜயவர்தன மற்றும் டீ. எஸ். சேனாநாயக்க ஆகியோரின் கொள்கைகளுக்கு அமைவான அரசியல் செயற்பாடாக இருக்கும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *