தமிழ் பாடசாலைகள் கூட்டமைப்பின் உதைபந்தாட்ட பெருவிழா [படங்கள்]


 

இலண்டனில் உதைபந்தாட்ட பெருவிழா நேற்று நடைபெற்றது. பிரித்தானியாவில் இயங்கும் தமிழ் பாடசாலைகள் விளையாட்டு சங்கம் இந்த நிகழ்வினை இவ்வாண்டு பல மாறுதல்களுடன் மிகச்சிறப்பாக ஒழுங்குசெய்துள்ளது. ஆடல் பாடல் விளையாட்டு இவற்றுடன் தாயக உணவுகள் மற்றும் பல்வேறு விற்பனை கூடாரங்களுடன் உதைபந்தாட்ட விழா நடைபெற்றது.

தமிழ் பாடசாலைகள் விளையாட்டு சங்கத்தினால் சுமார் 27 வருடங்களாக விளையாட்டு நிகழ்வுகள் கோலாகலமாக நடைபெற்று வருவது யாவரும் அறிந்ததே. மே மாத வங்கி விடுமுறையில் குடும்பத்துடன் பலர் கலந்து சிறப்பிக்கும்  உதைபந்தாட்ட போட்டியாக இது நடைபெற்றது. ஆவணி மாதம்  இறுதியில் வரும் வங்கி விடுமுறையில் மிகவும் பலத்த எதிர்பார்ப்புடன் துடுப்பாட்டப் போட்டி நடைபெற உள்ளது.



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *