யார் இந்த கான்ட்ராக்டர் நேசமணி…? எதற்கு இவ்வளவு மீம்ஸ்..?


விஜய், சூர்யா, வடிவேலு நடிப்பில் வெளியான ப்ரெண்ட்ஸ் படத்தில் இடம்பெற்றுள்ள காமெடியை மையப்படுத்தி #Pray_for_Neasamani என்ற ஹேஷ்டேக்கை நெட்டிசன்கள் இந்திய அளவில் டிரெண்டாக்கி வருகின்றனர்.

சமீபத்தில் ஒரு சமூகவலைத்தள க்ரூப்பில் ஒரு சுத்தியலின் படத்தை ஒருவர் பதிவிட்டு உங்கள் ஊரில் இதன் பெயர் என்ன என கேட்கப்பட்டிருந்தது.

அதற்கு ஒருவர் இதற்கு பெயர் சுத்தியல். இதை எதன் மீதாவது அடித்தால் ‘டங்க் டங்க்’ என சத்தம் வரும்.

பெயிண்டிங் காண்ட்ராக்டர் நேசமணி ஜமீன் மாளிகையில் வேலைபார்த்துக் கொண்டிருக்கும் போது அவரது அண்ணன் மகன் ரமேஷ் கண்ணா, அவர் தலையில் போட்டுவிட்டார்.

இதனால் அவரது தலை உடைந்துவிட்டது. பாவம் என பதிவிட்டிருந்தார். இங்குதான் தொடங்கியது இந்த #Pray_for_Neasamani என்ற ஹேஷ்டேக்.

இதை வைத்து தான் தற்போது நெட்டிசன்கள் பலரும் பல்வேறு விதமான மீம்ஸ்களை கிரியேட் செய்து கலாய்த்து வருகின்றனர்.

ப்ரெண்ட்ஸ் படத்தில் வடிவேலு காண்டிராக்டர் நேசமணி என்ற கேரக்டரில் வீட்டிற்கு வெள்ளை அடிக்கும் காண்டிராக்டராக நடித்திருப்பார்.

ஒரு காட்சியில் சுவற்றில் உள்ள ஆணிகளை பிடுங்க வடிவேலு ரமேஷ் கன்னாவிற்கு உத்தரவு பிறப்பிற்பார்.

ரமேஷ் கண்ணா ஒரு படிக்கட்டு மேல் ஏறி ஆணிகளை பிடிங்கிக்கொண்டிருக்கும் போது கை தவறி சுத்தியல் கீழே நிற்கும் வடிவேலு தலையில் விழுந்து, அவர் மயக்கம் அடைந்து விடுவார்.

பிறகு சிறுது நேரம் கழித்து வடிவேலுவுக்கு தண்ணீர் தெளிக்கப்பட்டு கண்விழித்து விடுவார்.

இதைத்தான் நெட்டிசன்கள் தற்போது மீம்ஸ் மூலம் ட்ரெண்டாக்கி வருகின்றனர்.

தமிழ் சினிமாவின் முன்னணி காமெடியன் வடிவேலுவின் காமெடிகள் தான் மீம்ஸ் கிரியேட்டர்ஸ்களுக்கு பெரும் தீனியாக இருப்பது குறிப்பிடத்தக்கது.

#Pray_for_Neasamani என்ற இந்த ஹேஷ்டேக் இந்தியாவில் முதன்நிலையிலும் உலகளவில் ஐந்தாவது இடத்திலும் இருப்பது குறிப்பிடத்தக்கது.

நன்றி – thinakaranLeave a Reply

Your email address will not be published. Required fields are marked *