மன நல பாதிப்பில் அகதிகள் – தடுப்பு முகாம்களை மூடக்கோரும் ஐ.நா


ஆஸ்திரேலியாவுக்கு படகு வழியாக வர முயற்சித்த 1400 அகதிகள் மற்றும் தஞ்சக்கோரிக்கையாளர்கள் நவுரு மற்றும் மனுஷ் தீவுகளில் செயல்பட்டு வரும் ஆஸ்திரேலிய தடுப்பு முகாம்களில் சிறைப்பட்டுள்ள நிலையில், அதில் நூற்றுக்கணக்கானோர்  உடல் ரீதியாகவும், மனநல பாதிப்புக்கும் உள்ளாகியுள்ளனர். இதை கருத்தில் கொண்டு, அவ்வாறான கடல் கடந்த தடுப்பு முகாம்களை மூடுவதற்கான கோரிக்கையை ஆஸ்திரேலியாவிடம் ஐ.நா. அகதிகள் ஆணையம் முன்வைத்துள்ளது.

ஐ.நா. அகதிகள் ஆணையத்தின் செய்தி தொடர்பாளரான கேத்ரின் ஸ்டூபர்பீல்ட் கூறுகையில், “கடல்கடந்த முகாம்களுக்கு வலுக்கட்டாயமாக மாற்றப்பட்ட அகதிகளின் உடல்நலன் மோசமடைந்து வரும் சூழலிலும் மருத்துவ உதவி குறைக்கப்பட்ட நிலையிலும், ஏதேனும் துன்பகரமான நிகழ்வு நடப்பதற்கு முன்னரும்  ஆஸ்திரேலியா நடவடிக்கை எடுக்க வேண்டும். அத்துடன் தேவையான மருத்துவ உதவிகளை பெறக்கூடிய வகையில் அந்த அகதிகள் மற்றும் தஞ்சக்கோரிக்கையாளர்கள் உடனடியாக ஆஸ்திரேலியாவுக்கு கொண்டுவரப்பட வேண்டும்” எனத் தெரிவித்திருந்தார்.
ஆஸ்திரேலிய அரசு, பல்வேறு வகையில் சட்ட விரோதமாக வரும் அகதிகளுக்கு எச்சரிக்கை விடுத்து வருவதோடு, பல படகுகளும் திருப்பி அனுப்பப்பட்டுள்ளன. இந்நிலையில் சுமார் 3000 அகதிகள் மற்றும் தஞ்சக்கோரிக்கையாளர்களை கடல் கடந்த முகாமக்களில் சிறைப்படுத்தப்பட்டுள்ளனர்.
அத்துடன், சுமார் 800 அகதிகள் நவுருத்தீவிலும், 650 அகதிகள் மனுஸ்தீவுளும் உள்ள முகாம்களில் சிறை வைக்கப்பட்டுள்ளமையும்  குறிப்பிடத்தக்கது.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *