இன அழிப்பிற்கு நீதி கோரி எழுச்சியடையும் யாழ் பல்கலைக்கழகம்


யாழ் பல்கலைக்கழக மாணவர்களின் தமிழ் இனப்படுகொலையை அடையாளப்படுத்தும் விதமாக மாணவர்கள் ஒன்றிணைந்து வாகன ஊர்திப்பயணத்தை ஆரம்பித்துள்ளனர்.

நேற்றைய தினம் ஆரம்பமான இப்பயணம் எதிர்வரும் 16 ஆம் திகதி மாபெரும் கண்டனப்பேரணியாக வலுச்சேர்க்கும் நோக்கோடு ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.

வடக்கு-கிழக்கு மாணவர்கள் ஸ்ரீலங்கா இராணுவத்திற்கு, ஐ.நா ஜெனிவா அமர்வில் கால நீடிப்பு கொடுக்கக்கூடாது என்பதை அடையாளப்படுத்துவதற்காகவே இந்த வாகன ஊர்திப்பயணத்தை மேற்கொள்வதாக யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் இதன்போது தெரிவித்துள்ளனர்.

 



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

seventeen − fifteen =