உயிர் அமைப்பின் உன்னத முயற்சி


கோயம்புத்தூரை விபத்துக்கள் இல்லா நகரமாக மாற்றும் இலக்கோடு பல தொழில்முனைவோர்கள் மற்றும் சமூக அக்கறை கொண்ட கோவை மக்களின் உதவியோடு இயங்கி வரும் அமைப்பு “உயிர்”. உயிர் அமைப்பு தொடங்கப்பட்ட பின் பல்வேறு சாலைப் பாதுகாப்பு குறித்து பங்களிப்பினை செய்து வருகின்றது.

தற்போது 4.5 கோடி ரூபாய் மதிப்புள்ள அதி நவீன சாலை பாதுகாப்பு உபகாரங்கள் வழங்கப்பட்டுள்ளது.இவை நகரத்தின் 10 முக்கிய சாலைகள் மற்றும் 40 சந்திப்புகளிலும் பொருத்தப்பட்டுள்ளது.

முதல் கட்டமாக ஜே எம் பேக்கரி சந்திப்பு, எல்ஐசி சந்திப்பு, குப்புசாமி நாயுடு மருத்துவமனை சந்திப்பு, அண்ணா சிலை சந்திப்பு, லட்சுமி மில்ஸ் சந்திப்பு உள்ளிட்ட சந்திப்புகளில் அதி நவீன சிக்கனல்களாக இனி இயங்கும்.

இந்த ஐந்து சிக்கனல்களை நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்புத் திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சர் எஸ்.பி வேலுமணி பெப்ரவரி 16 சனிக்கிழமை மாலை 6 மணிக்கு அண்ணா சிலை சிக்னலில் குத்துவிளக்கேற்றி துவங்கி வைத்தார்.

உயிர் அமைப்பினால் தற்போது சிக்கனல்களில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமராக்கள் இரவில் கூட மிகக்குறைந்த ஒளியில் இயங்கக்கூடிய திறன் வாய்ந்தவை. மேலும் அதிவிரைவாக செல்லும் வாகனங்களின் எண்களையும் இதனால் படம்பிடிக்க இயலும்.

 Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *