கலிபோர்னியாவில் பலத்த மழை | நிலச்சரிவு 13 பேர் பலி | அமெரிக்கா


அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தின் தெற்கு பகுதிகளில் கடந்த சில தினங்களாக பலத்த காற்றுடன் கனமழை பெய்து வருகிறது.

நீர் நிலைகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு ஊருக்குள் தண்ணீர் புகுந்து உள்ளது.

இதில், அங்கு உள்ள சாண்டா பர்பாரா என்கிற மாவட்டம் கடும் பாதிப்புக்குள்ளாகி உள்ளது. ரோமியோ கன்யான், மான்டென்சியோ ஆகிய நகரங்களில் வெள்ளப்பெருக்கு மற்றும் பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டது.

நிலச்சரிவில் சிக்கி வீடுகள் உள்ளிட்ட ஏராளமான கட்டிடங்கள் இடிந்து விழுந்தன. இதில் பலர் இடிபாடுகளுக்குள் சிக்கிக்கொண்டனர். மழை, வெள்ளம் பாதித்த பகுதிகளில் மீட்பு பணிகள் முடுக்கிவிடப்பட்டு உள்ளன.

அங்கு நிலச்சரிவில் சிக்கி 13 பேர் உயிர் இழந்தனர். 160–க்கும் மேற்பட்டோர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு, சிகிச்சைக்காக மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். அவர்களில் பலரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக தெரிகிறது. எனவே பலி எண்ணிக்கை மேலும் உயரலாம் என அஞ்சப்படுகிறது.

ரோமியோ கன்யான் என்கிற இடத்தில் மட்டும் 300 பேர் சிக்கி உள்ளனர். அவர்களை மீட்பதற்கான பணிகள் முழுவீச்சில் நடந்து வருகின்றன.Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

eighteen + 5 =