“விமான நிலைய ஊழியர்களுக்கு சீக்கிய வரலாறு குறித்து பாடம் எடுக்க தயாராக உள்ளேன்” | அமெரிக்கவாழ் சீக்கியர்


அமெரிக்கவாழ் சீக்கியர் வாரிஸ் அலுவாலியா (வயது 41) நடிகராவும், டிசைனராகவும் உள்ளார்.  கடந்த 8-ந் தேதி அலுவாலியா மெக்சிகோ சிட்டியில் இருந்து நியூயார்க் திரும்புவதற்காக ஏரோ மெக்சிகன் விமானத்தில் செல்ல இருந்தபோது, அவரை சோதனையிட்ட விமான நிலைய பாதுகாப்பு அதிகாரி தலைப்பாகையை அகற்றுமாறு கூறிஉள்ளார். ஆனால், தலைப்பாகையை அகற்ற அலுவாலியா மறுத்து விட்டார். இதையடுத்து அவரை விமானத்தில் ஏற்ற அந்த அதிகாரி மறுத்து விட்டார்.

சீக்கியரின் விமான பயணத்துக்கு தடை விதிக்கப்பட்ட தகவல் விமான நிலைய உயர் அதிகாரிகளுக்கு தெரியவந்தது.

உடனே அந்த விமான நிறுவனம், அலுவாலியாவிடம் மன்னிப்பு கேட்டுக்கொண்டது. இது குறித்து அந்த நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், அலுவாலியாவின் விமான பயணத்துக்கு தடை விதிக்கப்பட்டதற்காக உண்மையிலேயே வருந்துகிறோம். பாதுகாப்பு அதிகாரி ஒருவரின் செயலால் அலுவாலியா மோசமான அனுபவத்தை பெற்று விட்டார். பாதுகாப்பில் அதிக கவனம் செலுத்தும் அதே நேரத்தில் பயணிகளின் கலாசாரம், பழக்கவழக்கங்களையும் மதிக்கிறோம் என்றார்.

”விமான நிறுவனத்தின் மன்னிப்பை ஏற்றுக்கொள்கிறேன். அவர்களின் இந்த முதல் முயற்சியை பாராட்டுகிறேன். வேண்டுமெனில் நான் மெக்சிகோ சிட்டியிலேயே தங்கி விமான நிலைய ஊழியர்களுக்கு சீக்கிய வரலாறு குறித்து பாடம் எடுக்க தயாராக உள்ளேன்” என்று  அலுவாலியா கூறிஉள்ளார். தலைப்பாகையை அகற்றுவது சங்கடமானது என்றால், பயணிகள் தலைப்பாகையை அகற்றவேண்டியது இல்லை என்று அமெரிக்கா கடந்த 2010-ம் ஆண்டு வழிகாட்டுதல்களை அமல்படுத்தியது என்பது குறிப்பிடத்தக்கது.Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *