மில்லியனர்கள் நாட்டை விட்டு வெளியேறுவதில் உலக அளவில் இந்தியா 4-வது இடம்


இந்தியாவில் இருந்து கடந்த ஆண்டில் மட்டும் 4 ஆயிரம் மில்லியனர்கள்(லட்சாதிபதிகள்) நாட்டை விட்டு வெளியேறி அயல்நாட்டு குடியுரிமை பெற்றுள்ளனர்.

மில்லியனர்கள் நாட்டை விட்டு வெளியேறுவதில் உலக அளவில் இந்தியா 4-வது இடத்தில் உள்ளது.

நியூ வேல்ட் வெல்த் என்ற நிறுவனம் வெளியிட்டுள்ள ஆய்வு அறிக்கை ஒன்றில் இந்த தகவல் வெளியாகி உள்ளது. அந்த அறிக்கையின் படி உலக அளவில் பிரான்சில் தான் கடந்த ஆண்டில் அதிக அளவில் 10 ஆயிரம் மில்லியனர்கள் வெளியேறியுள்ளனர்.

அதற்கு முக்கிய காரணமாக பிரான்சில் முஸ்லீம்கள் மற்றும் கிறிஸ்தவர்களிடையே நிலவி வரும் பதற்றமான சூழல் தான் காரணம் என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

பிரான்சிற்கு அடுத்தபடியாக சீனா இரண்டாவது இடத்தில் உள்ளது. சீனாவில் கடந்த ஆண்டு 9 ஆயிரம் மில்லியனர்கள் வெளியேறியுள்ளனர். அதற்கு அடுத்தப்படியாக இத்தாலியில் 6 ஆயிரம் பேர்.

இந்தியா மற்றும் சீனாவை பொறுத்தவரை புதிய மில்லியர்னர்களை அதிக அளவில் உருவாக்கி வருவதால் இந்த வெளியேற்றம் ஒரு பிரச்சனையாக இருக்காது என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மில்லியனர்கள் தங்கள் நாட்டிற்குள் வரும் வருகையை பொறுத்தவரை ஆஸ்திரேலியா முதலிடத்தில் உள்ளது. ஆஸ்திரேலியாவில் கடந்த ஆண்டு மட்டும் 8 ஆயிரம் மில்லியனர்கள் குடியேறியுள்ளனர். அதற்கு அடுத்தபடியாக அமெரிக்காவில் 7 ஆயிரம் மில்லியனர்களும், கனடாவில் 5 ஆயிரம் மில்லியனர்களும் உலகம் முழுவதும் இருந்து குடியேறியுள்ளனர்.Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *