29,184 டொலருக்கு ஏலம் | டிரம்ப் வரைந்த சித்திரம்

2 views

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் வரைந்த சித்திரம் ஒன்று 29,184 டொலருக்கு ஏலம்போயுள்ளது.

டிரம்ப் கோபுரத்திற்கு முக்கியத்துவம் அளித்து, மான்ஹட்டன் அடுக்குமாடி கட்டடங்களை சித்தரிப்பதாக இந்த சித்திரம் அமைந்துள்ளது.

2005 ஆம் ஆண்டு நன்கொடைக்கான ஏல விற்பனை ஒன்றுக்காக வரையப்பட்ட இந்த சித்திரத்தை வாங்கியவர் அதனை லொஸ் ஏஞ்சல்சை தளமாகக் கொண்ட நெட் டி சான்டர்ஸ் ஏல நிறுவனத்திற்கு வழங்கியுள்ளார்.

9,000 அமெரிக்க டொலர்களில் ஆரம்பிக்கப்பட்ட இந்த சித்திரத்தின் ஏலம், இறுதியாக, 29,184 டொலர்களில் முடிவடைந்தது. இதன்போது பதினொருவர் ஏலம் கேட்டிருந்தனர். “இந்த சித்திரம் டிரம்ப் ஆதரவாளர்களிடம் மட்டுமன்றி, ஜனாதிபதி நினைவுச் சின்னங்களை சேகரிப்பவர்களிடமும் அவதானத்தை பெற்றதாக ஏல நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

இதற்கு முன்னர் ஏற்கனவே, டிரம்ப் பயன்படுத்திய பெரராரி ரக சொகுசு கார், கொல்ப் கழகத்தின் ஒரு தொகுப்பு மற்றும் டிரம்ப் கையெழுத்திட்ட விஸ்கி போத்தல் ஆகியவை ஏலம் விடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 × two =