14 செயற்கைகோள்களை வானிலை ஆராய்ச்சிக்காக விண்ணில் ஏவுகிறது சீனா


வரும் 2025-ம் ஆண்டுக்குள் 14 செயற்கைகோள்களை வானிலை ஆராய்ச்சிக்காக வி்ண்ணில் செலுத்த உள்ளதாக சீனா தெரிவித்துள்ளது. இதுகுறித்து, அந்நாட்டின் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மையத்தின் துணைத் தலைவர் வூ யன்குவா தெரிவிக்கையில், ஒரு ‘பெங்யுன்-2’ செயற்கைகோள், 4 ‘பெங்யுன்-3’ செயற்கைகோள்கள் மற்றும் 6 செயற்கைகோள்களை விண்ணில் ஏவவுள்ளதாக தெரிவித்தார்.

பெங்யுன் செயற்கைகோள்கள் வானிலை மாற்றங்களை ரிமோட் சென்ஸிங் மூலம் தொடர்ந்து கண்காணித்து உணரக்கூடியது. 1988 முதல் இதுவரை 14 பெங்யுன் செயற்கைகோள்களை விண்ணில் செலுத்தியுள்ளது. இவற்றில் 7 செயற்கைகோள்கள் இன்னும் புவியின் சுற்றுவட்டப்பாதையில் உள்ளன.

அமெரிக்காவின் ஜி.பி.எஸ். தொழில்நுட்பத்தை சார்ந்து இருக்கும் நிலையை முடிவுக்கு கொண்டு வந்து சொந்தமாக குளோபல் நேவிகேஷனை பெற 40 பெய்டோ செயற்கைகோள்களையும் அடுத்த 5 ஆண்டுகளுக்குள் சீனா செலுத்த உள்ளது. அதேபோல், முதல்முறையாக சூரிய சக்தியால் இயங்கும் செயற்கைகோள் உள்பட 5 புதிய செயற்கைகோள்களையும் சீனா விண்ணில் செலுத்த உள்ளது.Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *