ஒரு வேளை உணவுடன் மகளை 4 வருட வீட்டு சிறை வைத்த தந்தை


இங்கிலாந்து நாட்டில் ஆண் நபர் ஒருவரை முத்தமிட்ட மகளை இஸ்லாமிய தந்தை ஒருவர் 4 வருடம் வீட்டு சிறையில் அடைத்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வேல்ஸில் உள்ள ஸ்வென்சா நகரில் அமீனா அல் ஜெப்ரி (21) என்ற இளம்பெண் வசித்து வந்துள்ளார். இவருக்கு சவுதி அரேபியா மற்றும் இங்கிலாந்து நாடுகளின் இரட்டை குடியுரிமை உள்ளது.

இந்த நிலையில், இங்கிலாந்தில்  வசித்தபோது அவர் தன்னுடன் பழகிய ஆண் நபர் ஒருவருக்கு பொது இடத்தில் முத்தமிட்டதாக கூறப்படுகிறது.

இந்த விவகாரம் வெளியேற இஸ்லாமிய மதப்பற்றுள்ள அவரது தந்தை அமீனாவை அழைத்துக்கொண்டு சவுதி அரேபியா சென்றுள்ளார்.

மேலும், மகளுக்கு மொட்டை அடித்த அவர் கை, கால்களில் சங்கிலியால் கட்டி ஓர் அறையில் அடைத்து வைத்ததாக கூறப்படுகிறது.

ஒரு வேளை உணவு மட்டுமே வழங்கிய நிலையில், அமீனா கழிவறைக்கு கூட செல்ல அனுமதிக்கப்படாமல், அதே அறையிலேயே சித்ரவதை செய்யப்பட்டதாக தற்போது லண்டன் நீதிமன்றத்தில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது.

மேலும், சவுதியில் வசிக்க அமீனாவிற்கு விருப்பம் இல்லாததால், அவரை இங்கிலாந்திற்கு திருப்பி அனுப்பப்பவும் அவரது தந்தை மறுத்துள்ளார். 4 வருடங்களுக்கு பிறகு, அமீனாவின் சகோதரியால் இந்த விவகாரம் வெளியேறியது தொடர்ந்து அவர் மீட்கப்பட்டுள்ளார்.

எனினும், லண்டன் நீதிமன்றத்தில் மகள் கூறியுள்ள அனைத்து புகார்களையும் தந்தை மறுத்துள்ள நிலையில், ஆண் நபரை முத்தமிட்ட காரணத்திற்காக மகளை வீட்டு சிறையில் அடைத்த தந்தை மீதான வழக்கு நடைபெற்று வருகிறது.Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *