12 ஆண்டு சிறை டி.வி.யை ஹேக் செய்த சீனருக்கு விதிக்கப்பட்டுள்ளது


நவீன தொல்நுட்பத்தின் அசுர வளர்ச்சியின் காரணமாக நாளுக்கு நாள் ஹேக்கர்களால் ஏற்படும் தொல்லைகள் அதிகரித்து வண்ணம் இருக்கிறது. அந்த வகையில், சீனாவை ஆளும் கம்யூனிச அரசுக்கு தொல்லை கொடுத்த ஹேக்கருக்கு அந்நாட்டு அரசு 12 ஆண்டு சிறை தண்டனை விதித்துள்ளது.

கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம், சீனாவின் கிழக்கு நகரமான வென்சோவில் 4 லட்சத்து 65 ஆயிரம் பேர் பயன்படுத்தும் செட் ஆப் பாக்ஸ் இணைப்பை ‘ஹேக்’ செய்த யாங் யிபோ என்ற ஆசாமி, அரசுக்கு எதிரான கருத்துக்களை பதிவு செய்துள்ளதாக சீனாவின் மத்திய தொலைக்காட்சி ஒளிபரப்பு துறை தெரிவித்துள்ளது.

குறிப்பிட்ட அந்த மாதத்தில், பார்வையாளர்கள் தொலைக்காட்சியில் ஒரு நிகழ்ச்சியைப் பார்த்துக் கொண்டிருந்த போது,
“கம்யூனிஸ்ட்களே!! நீங்கள் ஏகப்பட்ட கொடூரங்களை செய்து விட்டீர்கள். இப்போது அதற்காக வருத்தப்படுங்கள்.” என்று ஒரு செய்தி வந்துள்ளது.

அதே மாதத்தில் பேஸ்கட் பால் விளையாட்டுப் போட்டி ஒளிபரப்பாகிக் கொண்டிருந்த போது அதற்கு இடையூறாக, சீனாவில் 1989-ம் ஆண்டு ஜனநாயக ஆட்சிகாக நடந்த போராட்டம் குறித்த புகைப்படம் ஒன்று தொலைக்காட்சி திரையில் தோன்றியது. மேலும் அந்த புகைப்படத்தில் “நண்பர்களே, கம்யூனிச கொடூரர்களுக்கு உதவாதீர்கள்.” என்று வந்தது.

இதையடுத்து, இந்த சம்பவம் நடந்த சில மாதங்களில் கைது செய்யப்பட்ட யாங் யிபோவுக்கு தற்போது 12 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *