ஜிம்பாப்வே விளையாட்டு வீரர்களை கைது செய்ய அதிபர் உத்தரவு | ரியோ ஒலிம்பிக்


ஒலிம்பிக்கில் பதக்கம் வெல்லாத கோபத்தால் போட்டியில் கலந்து கொண்ட  ஜிம்பாப்வே விளையாட்டு வீரர்கள் அனைவரையும் கைது செய்து சிறையில் அடைக்க அதிபர் உத்தரவிட்டு உள்ளார்.

நடந்து முடிந்த ஒலிம்பிக் போட்டியில்  ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான ஜிம்பாப்வே சார்பில் 31 வீரர்-வீராங்கனைகள் கலந்து கொண்டனர். இந்த நாட்டின் சார்பில் எந்த வித பதக்கமும் பெற வில்லை.  எந்த வீரரும் 8 வது இடத்திற்கு குறைந்து வரவில்லை.

இந்த நிலையில் ஜிப்பாப்வே அதிபர் ரோபர்ட் முகாபே  பதக்கம் வெல்லாத ஒலிம்பிக் போட்டியில் கலந்து கொண்ட 31 வீரர் வீராங்கனைகளையும் கைது செய்து சிறையில் அடைக்க உத்தரவிட்டு உள்ளார்.

ஜிம்பாப்வே தேசிய இடைக்கால அதிகார சபை  வெளியிட்டு உள்ள தகவலின் படி அதிபர் முகாபே போலீஸ் ஆணையாளர்  அகஸ்டின் சிகுரியை சந்தித்தார் அப்போது  ஹராரே விமான நிலையம் வந்து இறங்கும் ஒலிம்பிக போட்டியில் கலந்து கொண்ட அனைத்து ஜிம்பாப்வே வீரர் வீராங்கனைகளையும் கைது செய்ய உத்தரவிட்டு உள்ளார்.

இவர்கள் நாட்டின் பணத்தை வீணாக்கி விட்டனர்  இவர்கள் எலிகள் அவர்களை நாம் விளையாட்டு வீரர்கள் என அழைக்கிறோம். அவர்கள் நாட்டிற்காக எந்த தியாகமும் செய்ய தயாராக இல்லை.இவர்களால் செம்பு,பித்தளை பதக்கங்கள் கூட வெல்ல முடியவில்லை ஆனால் நமது பக்கத்து நாடு போட்ஸ்வானாவால் முடிந்து உள்ளது. இவர்கள் அங்கு சென்று நமது பணத்தை வீணாக்கி வந்து உள்ளனர்.என அதிபர் கூறி உள்ளார்.

இது போல் 7 பதக்கங்களை மட்டுமே வென்ற வடகொரிய வீரர்கள் மீது அதிருப்தியில் இருந்த அந்த நாட்டு ஆட்சியாளர் கிம் ஜாங் யுன் பதக்கம் வெல்லாத வீரர்களை தண்டிக்கும் விதமாக, அவர்களை நிலக்கரி சுரங்கங்களில் கூலித்தொழிலாளியாக வேலைக்கு  அமர்த்த முடிவு செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகி இருந்தன.Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *