ரூ.96,500 கோடி ஆப்பிள் நிறுவனத்துக்கு அபராதம்


இலங்கையில் ‘ஹெராயின்’ போதைப்பொருள் கடத்தலில் இந்தியர் உள்பட 6 பேரை இலங்கை கடற்படை கைது செய்தது.

‘ஹெராயின்’ கடத்தல்

இலங்கைக்குள் 2 கிலோ எடைக்கும் அதிகமான ‘ஹெராயின்’ போதைப்பொருளை கடத்திச் சென்றதாக இந்தியர் ஒருவர், இலங்கைவாசிகள் 5 பேர் என 6 பேரை அந்த நாட்டின் கடற்படை கைது செய்தது. இவர்கள் மன்னார் மாவட்டம், பள்ளிமுனையில் 2 கிலோவுக்கும் மேற்பட்ட  ‘ஹெராயின்’ போதைப்பொருளுடன் கடற்படையினரிடம் சிக்கினர்.

அதைத் தொடர்ந்து தென் இந்தியாவில் இருந்து போதைப்பொருள் கடத்தலை தடுப்பதற்காக இலங்கையின் வட கடலோரப் பகுதியில் கண்காணிப்பை பலப்படுத்தி உள்ளனர்.

கடற்படை தளபதி தகவல்

இதற்கிடையே இலங்கை கடற்படையின் வடக்கு பிராந்திய தளபதி பியல் டி சில்வா கொழும்பு நகரில் நேற்று நிருபர்களிடம் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:–

இந்தியாவில் கேரள மாநிலத்தில் இருந்து கடந்த 18 மாதங்களில் 612 கிலோ எடையுள்ள கஞ்சா கடத்தப்பட்டு வந்ததை கண்டுபிடித்துள்ளோம்.

நமக்கு உள்ள மிகப்பெரிய அச்சுறுத்தல், மீன்பிடி ஆதாரங்களை காப்பதுதான்.

கடந்த வாரம் இந்தியாவில் இருந்து கடத்தப்பட்டு வந்த 5½ கிலோ தங்கத்துடன் ஒரு படகை கைப்பற்றி உள்ளோம்.

இவ்வாறு அவர் கூறினார்.Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *