ஆற்றில் சுற்றுலாப் படகு கவிழ்ந்து 13 பேர் பலி | தாய்லாந்து


தாய்லாந்தின் வடக்கு பாங்காங்கில் இருந்து 80 கி.மீட்டர் தொலைவில் உள்ள பழமையான நகரம் ஆயுத்தயா. பிரபலமான சுற்றுலாத் தலமான இந்த நகரத்தில் சாயோ ப்ரயா ஆறு ஓடுகிறது. இந்த ஆற்றில் படகு சவாரி செல்வது வழக்கம்.

இன்று சுமார் 100 பேரை ஏற்றிக் கொண்டு படகு ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது இந்த படகின் அருகில் மற்றொரு படகு சென்று கொண்டிருந்தது. அந்த படகின் மீது மோதிக் கொள்ளாமல் இருப்பதற்காக படகோட்டி படகை திருப்பினார். அப்போது படகு அருகில் இருந்த பாலத்தின் கான்கீரட் பில்லர் மீது எதிர்பாராத விதமாக மோதி மூழ்கியது.

இதில் 13 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 33 பேர் காயம் அடைந்தனர்.Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *