விளையாடும் போது ஏற்பட்ட விபரீதம் | இந்தோனேசியாவில் கால்பந்து வீரர் பலி


இந்தோனேசியாவின் கால்பந்து வீரரான சொய்ருல் குடா பெர்சிலா லமான்கான் கிளப் சார்பாக 500-க்கும் மேற்பட்ட போட்டியில் கோல்கீப்பராக விளையாடி உள்ளார். மேலும், அவர் தேசிய அளவிலான போட்டியிலும் பங்கேற்று உள்ளார்.

இந்நிலையில், கிளப் சார்பாக நேற்று நடைபெற்ற போட்டியில் விளையாடிக் கொண்டிருந்த போது எதிர் அணியின் பந்தை தடுக்க முயன்ற போது பிரேசில் வீரரான ரமன் ராட்ரிகஸ் உடன் மோதி கீழே விழுந்தார். இதில் அவரது தலை மற்றும் கழுத்தில் பலத்த காயம் ஏற்பட்டது.

உடனடியாக அவருக்கு முதலுதவி கொடுக்கப்பட்டது. பின்னர் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். ஆனால் குடாவிற்கு இதயத்தில் அடைப்பு ஏற்பட்டதால் மூச்சுத் திணறி பரிதாபமாக உயிரிழந்தார். அவரின் மரணம் அனைவரிடமும் சோகத்தை ஏற்படுத்தியது.

குடாவின் மரணத்திற்கு நாட்டின் பல கால்பந்து வீரர்கள் இரங்கல் தெரிவித்தனர். மேலும், ஆயிரக்கணக்கான ரசிகர்கள் சமூக ஊடகங்களில் தங்கள் வருத்தத்தை பதிவு செய்து வருகின்றனர்.Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *