டாக்டர் தகுதித் தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற ரோபோ | சீனா


சீனாவில் இந்த ஆண்டு ஆகஸ்டில் டாக்டருக்கான தகுதி தேர்வு நடந்தது. அதில் 5 லட்சத்து 30 ஆயிரம் பேர் கலந்துகொண்டு தேர்வு எழுதினார்கள்.

அவர்களில் ஒரு ‘ரோபோ’வும் (எந்திரமனிதனும்) தேர்வு எழுதியது. இதை சீனாவின் தொழில்நுட்ப நிறுவனமான ஐபிளை டெக் மற்றும் டிசின்டுவா பல்கலைக்கழகமும் இணைந்து உருவாக்கினர்.

இந்த நிலையில் நேற்று தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டன. அதில் ‘ரோபோ’ டாக்டருக்கான தகுதி தேர்வில் அதிக மதிப்பெண் பெற்றுள்ளது. தேர்வு எழுதியவர்கள் அதிக பட்சமாக 360 மதிப்பெண் பெற்று இருந்தனர். ஆனால் ‘ரோபோ’ அவர்களைவிட அதிகமாக 456 மதிப்பெண் பெற்றுள்ளது.

தேர்வு எழுதியவர்களுக்கு இன்டர்நெட் உதவி வழங்கப்பட்டது. ஆனால், ‘ரோபோ’ எந்தவித உதவியுமின்றி தேர்வு எழுதியுள்ளது. இந்த ரோபோக்கள் ஆஸ்பத்திரியில் நோயாளிகளின் உடல்நிலையை பரிசோதித்து டாக்டர்களுக்கு உதவ உருவாக்கப்பட்டவையாகும்.Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *